ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையை தவிர வேறுவழியில்லை: முதல்வர் மெஹ்பூபா

சனிக்கிழமை, 17 ஜூன் 2017      இந்தியா
mehbooba-mufti 2016 06 5

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தையை விட வேறு வழியில்லை என்று அந்த மாநில முதல்வர் மெஹ்பூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதற்காக ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும் மாநிலத்தில் மரணமடைந்த 2 தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதன் மீதனான விவாதத்தின்போது  முதல்வர் மெஹ்பூபா முப்தி  கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தையை தவிர வேறுவழியில்லை. பிரச்சினைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தைதான் ஒரே வழி என்பது எங்களது கொள்கையாகும். 2002-ம் ஆண்டில் இருந்து இதுவரை அந்த கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையால் பல தடவை போர் நடந்துள்ளது. ஆனால் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியவில்லை. துப்பாக்கி முனையிலும் ஆயுதங்களாலும் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. பிரச்சினைக்கு தீர்வுகாணுவதில் நாங்கள் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம். நமது மக்கள் இறந்துகொண்டியிருக்கிறார்கள். எல்லைக்கோடு நெடுகிலும் வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இருதரப்பிலும் ஏழைமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு முதல்வர் மெஹ்பூபா முப்தி கூறினார்.

கூட்டத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து ஆராய சர்வகட்சியினர் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவானது அறிக்கை சமர்ப்பிக்கும் வரை சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து