முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாத்மா காந்தி தொடங்கிய சபர்மதி ஆசிரமத்தில் நூற்றாண்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : தேசத் தந்தை மகாத்மா காந்தி தொடங்கிய சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய காந்தியடிகள், கடந்த 1915 மே 25-ம் தேதி அகமதாபாத்தின் கோச்ரப் பகுதியில் தனது முதல் ஆசிரமத்தைத் தொடங்கினார். பின்னர் 1917 ஜூன் 17-ம் தேதி அந்த ஆசிரமத்தை அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றங்கரைக்கு மாற்றினார்.

13 ஆண்டுகள் காந்தி வாழ்ந்த இடம்

விவசாயம், கால்நடை வளர்ப்பு, கோசாலை, காதி மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்திக்கு சபர்மதி ஆற்றங்கரை ஏற்றதாக இருக்கும் என்பதால் ஆசிரமம் இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த ஆசிரமத்தில் 1917 முதல் 1930 வரை காந்தியும் அவரது மனைவி கஸ்தூர்பாவும் வசித்தனர். அப்போது சுதந்திரப் போராட்டத்தின் தலைமையக மாக சபர்மதி ஆசிரமம் விளங்கியது.

கோபாலகிருஷ்ண காந்தி தலைமை

வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி தலைமை வகித்தார். இதையொட்டி நேற்று காலை ஆசிரமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் 2 அரங்குகளை கோபாலகிருஷ்ண காந்தி திறந்துவைத்தார். 2 நூல்களையும் அவர் வெளியிட்டார். மாலையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து