நதிகளை இணைக்க, சொன்னபடி ரூ.1 கோடி தர வேண்டும் - ரஜினிகாந்திடம் அய்யாக்கண்ணு கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      தமிழகம்
rajini-ayyakannu 2017 6 18

சென்னை, :  இந்திய நதிகளை இணைக்க ஒரு கோடி ரூபாய், நடிகர் ரஜினி தருவதாக ஏற்கனவே கூறியிருந்தார். அந்தப் பணத்தை கொடுத்து விரைவில் நதிகளை இணைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் அய்யாக்கண்ணு. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சென்று தொடர் போராட்டத்தை நடத்தியவர்.

ரஜினிகாந்த் வீட்டில் அய்யாக்கண்ணு


சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு நேற்று அய்யாக்கண்ணு சென்று சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியிடம் இந்திய நதிகளை இணைக்க நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்த வேண்டும் என்று அய்யாக்கண்ணு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நதிகள் இணைப்பிற்காக ஒரு கோடி ரூபாயை பிரதமரிடம் வழங்க வேண்டும் என்று ரஜினியிடம் கோரிக்கை வைத்தோம். அப்போது, அந்தப் பணத்தை தர தயாராக உள்ளதாக ரஜினி கூறியுள்ளார். எங்களிடம் பேசிய ரஜினி, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, தென்பெண்ணை, பாலாறு, காவிரியை இணைக்க வேண்டும் என்று சொன்னார்.மேலும், நாங்கள் தொடங்கவிருக்கின்ற போராட்டத்தை அமைதியான வழியில் நடத்த வேண்டும் என்று கூறினார் என்று அய்யாக்கண்ணு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து