முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டி அருகே கே.வெங்கடேசபுரத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைச்சர் கடம்பூர்ராஜூ திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      தூத்துக்குடி
Image Unavailable

கோவில்பட்டி அருகே கே.வெங்கடேசபுரத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி  கட்டிடத்தினை கலெக்டர்என்.வெங்கடே~ன்  தலைமையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது 

சரித்திர சாதனை

மறைந்த  புரட்சித்தலைவி அம்மா  குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், தாய்மார்கள் பயன்பெறும் வகையிலும்;  வாழ்வில் ஆரோக்கியத்துடன் வாழவும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி  வாழ்வில் ஒளியேற்றினார்கள். இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள் அனைவரும் வியந்து பாராட்டும் வகையில் தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சி வழங்கி சரித்திர சாதனை புரிந்தார்கள்.

பெண்களுக்காக

தமிழ்நாட்டில் கடைகோடியில் உள்ள ஏழை, எளிய குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டு அதன் மூலம் பலர் பயன்பெற்று வருகின்றனர். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு முன்வருவக்கல்வியுடன் சத்தான உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர்  ஆணையால் அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்வி உபகரணங்கள், சைக்கிள், பொம்மைகள்,  போன்ற விளையாட்டு உபகரணங்கள் அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. தக்காளி சாதம், கலவை சாதம், காய்கறி புலவு, எலுமிச்சை சாதம், பருப்பு சாதம், முட்டை, பாசி பயிறு, கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு ஆகியவை  ஆரோக்கியத்தை பேணும் பொருட்டு வழங்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கால்சியம், வைட்டமின், கோதுமை, கம்பு, கேழ்வரகு, பாசிப்பயறு மற்றும் சிறுதானியங்களின் கலவையாக சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது. ஏழை, எளிய குழந்தைகள் சத்தான உணவுடன் கல்வி கற்கவும், கர்ப்பிணிகள் மற்றும் பாலுட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், கர்ப்பிணிகள், வளர் இளம் பெண்கள் மத்தியில் ஊட்டச்சத்து சம்பந்தமாக தேவையான பராமரிப்பு விழிப்புணர்வை மேலோங்கச்செய்யும், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கவும் தற்போது  கே.வெங்கடேசபுரத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறக்கப்;பட்டுள்ளது இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் உமாமகேஸ்வரி, தூத்துக்குடி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, கோவில்பட்டி கோட்டாச்சியர் அனிதா,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.நவாஸ்கான், பெருநகரசெயலாளர் எஸ். விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், செல்வகுமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், இளைஞர்பாசறை பழனிக்குமார், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல பொருளாளர் பொன்ராஜ், மாணவரணி நகரசெயலாளர் எல்.எஸ்.பாபு, மாவட்டபிரதிநிதி பொன்னுச்சாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து