முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து சமய அறநிலைத் துறை சார்பில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறு சிறு கோயில்களுக்கு பூஜை பொருட்கள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் மாவட்டம் இந்து சமய அறநிலைத் துறை சார்பாக மாவட்டத்திலுள்ள சிறு சிறு திருக்கோயில்களுக்கு பூஜை பொருட்களை  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் 420 திருக்கோயில் குருக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி  தலைமையில் வழங்கி   சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  விழா பேருரையாற்றினார்.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா  2015-2016-ம் ஆண்டு சட்டமன்ற பேரவையில் விதி எண்.110-ன்கீழ் தமிழ்நாட்டில் கிராம புறங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வர்ழும் பகுதியில் அமைந்துள்ள பத்தாயிரம் சிறிய திருக்கோயில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்கள்.இத்திட்டத்தின் கீழ 2015-2016-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 400 திருக்கோயில்களுக்கு வழங்கப்பட்டது.  இவ்நிதியாண்டில் தற்பொழுது 420 திருக்கோயில்களுக்கு பூஜை உபகரணங்களான தாம்பளம், கைமணி, தூபக்கால், கார்த்திகை விளக்கு, தொங்கு விளக்கு வழங்கப்பட்டுள்ளது.

 பூஜை பொருட்கள்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா  இந்து சமய அறநிலைத்துறையின் மூலமாக கோயில்களில் அன்னதானம் திட்டத்தை கொண்டுவந்தார்கள்.  இத்திட்டத்தின் மூலமாக விழப்புரம் மாவட்டத்தில் 22 கோயில்களில் அன்னதானம் திட்டம் நடைபெற்று வருகிறது.  தற்போது 2017-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி வட்டம், சித்தலூர் கிராமம் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் புதியதாக சேர்க்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 1250 பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள். 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6 திருக்கோயில்களுக்கு 13-வது நிதி உதவியின் மூலம் ரூ.2.91 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்றுள்ளது.  மேலும், 2012 முதல் 2017 வரை விழுப்புரம் மாவட்ட கிராம புறங்களில் உள்ள 135 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட ரூ.82 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.  2012 முதல் 2017 வரை கிராமப்புற திருக்கோயில் திருப்பணிக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.  தற்பொழுது 2016-2017-ம் நிதியாண்டில் இத்திருப்பணி நிதி உயர்த்தப்பட்டு தலா ரூ.1 இலட்சம் வழங்கப்பட உள்ளது.  இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 29 திருக்கோயில்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வீதம் ரூ.29 இலட்சம் வழங்கப்பட உள்ளது.2011 முதல் 2017 வரை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட 158 திருக்கோயில்களுக்கு ரூ.89 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.  மேலும், மாவட்டத்தில் உள்ள 18 திருத்தேர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் அரசு நிதியுதவி வழங்கப்பட்டு உபயதாரர்கள் பங்களிப்புடன் திருத்தேர் பழுது மற்றும் புதுப்பித்தல் பணி நடைபெற்று வருகிறது.   மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஒரு கால பூஜை திட்டத்தை கொண்டு வந்தார்கள்.  இதனால் தினசரி ஒரு கால பூஜை சிறப்பாக இன்று வரை நடைபெற்று வருகிறது.  விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கால பூஜை நிதியுதவித் திட்டத்தின் கீழ் இத்துறை ஆளுகையின் கீழ் உள்ள நிதி வசதி இல்லாத 588 திருக்கோயில்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வீதம் நிதியுதவி முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து வரப்பெறும் வட்டித் தொகை திருக்கோயில்களுக்கு தினசரி ஒரு கால பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த முதலீடு தொகை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.1 இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.  மறைந்த முதலமைச்சர் அம்மா  இந்து அறநிலை சமயத்துறையின் மூலமாக திருக்கோயில் பூசாரிகள் ஓய்வூதிய திட்டம், துறை நிலையான ஓய்வூதிய திட்டம், திருக்கோயில்களுக்கு அரசு நிதி மற்றும் பொது மக்கள் பங்களிப்புடன் திருக்குடமுழுக்கு பணி போன்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்கள்.  இத்திட்டங்கள் அனைத்தையும் இவ்வரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  தெரிவித்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சிசேவல் வெ.ஏழுமலை, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற  உறுப்பினர் டாக்டர் க.காமராஜ், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, வானூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சக்ரபாணி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு, விழுப்புரம் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஜீனத்பானு அவர்களும் மற்றும் அனைத்து துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து