தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 % ஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      சென்னை
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12(1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணைய வழியாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

 மீண்டும் சேர்க்கை

சேர்க்கைக்கான குழந்தைகளைத் தெரிவு செய்யும்பணி 31.05.2017 அன்று அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற்றது. தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளில் இணைப்பில் கண்டுள்ள பள்ளிகளில் ஒருசிலர் சேர்க்கைக்கு வராத காரணத்தில் மெட்ரிக் பள்ளிகளில் நிலுவையாக உள்ள 453 மாணவர்களக்க, நர்சரி மற்று பிரைமரி பள்ளிகளில் நிலுவையாக உள்ள 91 மாணவர்களுக்கு ஆக மொத்தம் 544 காலியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட பள்ளிகளில் 20.06.2017 அன்று காலை 10.00 மணிக்குச் துறைசார்ந்து பிரதிநிதி முன்னிலையில் சேர்க்கை வழங்கப்படவுள்ளது.
 
 எனவே, ஏற்கனவே இணையவழியாக விண்ணப்பித்துச் சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்படாத குழந்தைகளின் பெற்றோர்கள் 20.06.2017 அன்று காலை 10.00 மணிக்கு சம்மந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று காலியாக உள்ள இடத்தில் சேர்க்கை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தெரிவிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து