முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவை வாட்டி எடுக்கும் வைரஸ் காய்ச்சல்: பலி எண்ணிக்கை 103 ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரளா மாநிலத்தை டெங்கு உள்பட வைரஸ் காய்ச்சில் வாட்டி வைத்து வருகிறது. அந்த மாநிலத்தில் இதுவரை வைரஸ் காய்ச்சலுக்கு 103-க்கும் மேலானோர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

சுகாதார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு மக்களை மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து எச்1என்1 மற்றும் டெங்கு போன்ற பலவிதமான வைரஸ் காய்ச்சல் பரவி மக்களை தாக்கி வருகிறது. இதற்கு 103 பேருக்கும் அதிகமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் பலியாகி இருப்பதாக மாநில சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பலியானவர்களில் எச்1என்1 காய்ச்சலுக்கு 53 பேர்களும் டெங்கு காய்ச்சலுக்கு 13 பேர் பலியாகி இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாநிலத்தில் அதிக அளவு கழிவுப்பொருட்கள் கொட்டப்படுவதால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி இருப்பதால்தான் வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணம் என்று கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். சமூகத்தில் சுத்தம்,சுகாதாரம் மிகவும் முக்கியமானதாகும் என்றும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு சுகாதார துறைகள் உள்ளாட்சி அமைப்புகள் சேர்ந்து போர்க்கால அடிப்படையில் சுகாதாரப்பணியில் ஈடுபட வேண்டும் என்றும்  பினராய் விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். கழிவுகளை கொட்டுவதை தடுத்தல் மற்றும் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை தீவிரபடுத்தி வருவதன்மூலம் வைரஸ் காய்ச்சல் பரவுவது குறைந்துள்ளது என்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வகை மருந்துகளும் இருப்பு உள்ளது என்றும் அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவுக்கு டாக்டர்கள் இருந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் பினராய் விஜயன் கூறியுள்ளார்.

இதற்கிடையில் முதல்வர் பினராய் விஜயனை அவரது அலுவலக இல்லத்தில்  மாநில காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா நேற்று நேரில் சந்தித்து எடுக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்த மனு ஒன்றை அளித்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் மாநிலத்தில் வைரஸ் காய்ச்சலால் இதுவரை 117 பேர் பலியாகி உள்ளனர் என்றார். தினமும் சராசரியாக 20 ஆயிரம் பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். இளைஞர்களும் சிறுவர்,சிறுமிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தவறிவிட்டது என்றும் இதற்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலாசாதான் காரணம் என்றும் சென்னிதாலா குற்றஞ்சாட்டினார். சென்னிதாலாவின் குற்றச்சாட்டை அமைச்சர் ஷைலாசா மறுத்து உள்ளார். வைரஸ்காய்ச்சல் பரவுவதை சென்னிதாலா அரசியலாக்குகிறார். அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றினால்தான் வைரஸ் காய்ச்சலை ஒழிக்க முடியும் என்றும் ஷைலாசா நேற்று கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து