முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமை பணிகள் முதல் நிலை தேர்வு நடைபெறும் தேர்வு மையம் : மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி, பார்வையிட்டு ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் இன்று (18.06.2017) நடைபெற்ற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குடிமை பணிகள் முதல் நிலை தேர்வு, மையத்தை மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி,, பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்விற்குப் பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இன்று நடைபெற்ற குடிமை பணிகள் முதல்நிலை தேர்வுக்கு 5632 தேர்வாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2460 பேர் தேர்வு எழுதினர். 3172 பேர் தேர்வு எழுத வரவில்லை. இத்தேர்வு திருச்சிராப்பள்ளியில்; 14 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

ஆய்வு

தேர்வு பணிகளுக்கென 16 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இப்போட்டித் தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 4 நடமாடும் குழு(ஆழடிடைந ருiவெ) அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் துணை கலெக்டர் நிலையில் ஒரு அலுவலர், ஒரு வருவாய் உதவியாளர், ஆயுதம் ஏந்திய ஒரு காவலர் மற்றும் ஒரு அலுவலக உதவியாளரும் உள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி, தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து