முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் 10 நிமிடத்தில் விற்று தீர்ந்தன

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தீபாவளி சிறப்பு ரயில்களின் முன்பதிவு டிக்கெட்டுகள் 10 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்தன,

வரும் அக்டோபர் 18-ந்தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த பொது மக்கள் தீபாவளி அன்று சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். தற்போது ரெயில்களில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யலாம்.
தீபாவளி பண்டிகைக்கான ரெயில் முன்பதிவு நேற்று தொடங்கியது. அக்டோபர் 16-ந்தேதிக்கான ரெயில் முன்பதிவு டிக்கெட்டுகள் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்காக சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் அதிகாலையிலேயே பயணிகள் குவிந்து இருந்தனர்.8 மணிக்கு கவுண்டர்கள் திறந்ததும் பயணிகள் முன் பதிவு செய்து டிக்கெட்டுகள் பெற்றுக் கொண்டனர். நெல்லை, கன்னியாகுமரி, பொதிகை ரெயில்களில் டிக்கெட்டுகள் 10 நிமிடத்தில் விற்று தீர்ந்தன.

டிக்கெட்டுகள் கிடைத்த பயணிகள் தீபாவளி பண்டிகை ரெயில் டிக்கெட்டுகள் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. “தீபாவளி கொண்டாடும் தினத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்“ என்றனர்.தீபாவளி டிக்கெட்டுகளை ஆன்லைன் கம்ப்யூட்டர் மூலம் பெரும்பாலானோர் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் ரெயில் கவுண்டர்களில் காத்திருந்த பலருக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை.அக்டோபர் 17-ந்தேதி பயணம் செய்பவர்கள் இன்றும் , அக்டோபர் 18-ந்தேதியும் பயணம் செய்பவர்கள் 20-ந்தேதியும் முன்பதிவு செய்யலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து