தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 69 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 42 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      தர்மபுரி
1

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டம் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம், பிராதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (மீனவர் குடியிருப்பு திட்டம்) ஆகிய திட்டத்தின்கீழ் 69 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 42 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்கள் துவக்கி வைத்தார். இவ்விழாவிற்கு கலெக்டர் கே. விவேகானந்தன், தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். காளிதாசன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

பசுமை வீடு

இவ்விழாவில் 69 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 42 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கி பேசியதாவது :-


புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 63 பயனாளிகளுக்கு சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ. 1 கோடியே 32 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான பசுமை வீடுகள், சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின்கீழ் தலா ரூ. 1 இலட்சத்து 70 ஆயிரம் வீதம் ரூ. 6 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான வீடுகள், பிராதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 1 இலட்சத்து 70 ஆயிரம் வீதம் ரூ. 3 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தருமபுரி மாவட்டத்தில் 623 பயனாளிகளுக்கு ரூ. 13 கோடியே 8 இலட்சம் மதிப்பில் பசுமை வீடுகளும், மீனவர் குடியிருப்பு ரூ. 85 இலட்சம் மதிப்பில் நடப்பாண்டில் வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் பசுமை வீடு வழங்கும் திட்டத்தில் ரூ. 1இலட்சத்து 80 ஆயிரம் வீடு கட்டுவதற்கு நிதியும், ரூ. 30ஆயிரம் சோலார் மின் வசதியும், ரூ. 18 ஆயிரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணியும், ரூ. 12 ஆயிரம் மதிப்பில் தனிநபர் கழிப்பறையும், மேலும் கூடுதல் நிதி தேவைப்படுமாயின் ரூ. 40 ஆயிரம் வங்கி கடனும் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.

காரிமங்கலம் புதிய வட்டாட்சியர் அலுவலகம், 30 படுக்கை வசதியுடன் அரசு மருத்துவமனை மேம்படுத்தியுள்ளது. தருமபுரி பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படவுள்ளது. காரிமங்கலத்தில் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, மாதிரி அரசு பள்ளி என எண்ணற்ற திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு செய்துள்ளது.

மேலும் காரிமங்கலம் வட்டத்தில் இருந்த புலிக்கல், அண்ணாமலைஅள்ளி, மகேந்திரமங்கலம், ஜிட்டாண்டஅள்ளி, கிட்டனஅள்ளி, ஜக்கசமுத்திரம், திம்மராயனஅள்ளி, மாரவாடி, முருக்கல்நத்தம், பிக்கனஅள்ளி, கருக்கனஅள்ளி, வெலகலஅள்ளி ஆகிய 12 வருவாய் கிராமங்கள் பாலக்கோடு வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 117 இடங்களில் போர்வெல் அமைத்து குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் 69 இடங்களில் போல்வேல் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தருமபுரி மாவட்டத்தில் 562 ஏரி, குளங்களில் வண்டல் மண் 7000 விவசாயிகளுக்கு 4 இலட்சம் அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். காளிதாசன், பாலக்கோடு சர்க்கரை ஆலைத் தலைவர் கே.வி. அரங்கநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சித்ரா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) புஷ்பலதா, கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர் எம். பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், வடிவேலன்நல்லம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சிவபிரகாசம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சிற்றரசு, முன்னாள் ஊராட்சித் தலைவர் தொ.மு. நாகராஜன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கோபால், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து