முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவில் சர்வீஸ் தேர்வில் செல்போனுடன் வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற ஆட்சிப் பணிக்கான (சிவில் சர்வீஸ்) முதன்மை எழுத்துத் தேர்வு நேற்று நாடு முழுவதும்(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

2017 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. 930 பணியிடங்களுக்கான இந்த தேர்வை 6 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதினர், தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, வேலூர் உள்ளிட்ட 74 மையங்களில் .தமிழகத்தில் முதன்மை தேர்வை 8304 பேர் எழுதினர். தேர்வை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 8 நடமாடும் ஒருங்கிணைப்பாளர்கள், 28 தேர்வு மேற்பார்வையாளர்கள், 28 துணை மேற்பார்வையாளர்கள், 720 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்,

தேர்வர்கள் போலீசாரின் சோதனைக்கு பிறகு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வின் போது செல்பேசி , கால்குலேட்டர், புளுடூத் போன்ற தொழில் நுட்ப சாதனங்கள் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் தேர்வு மையங்கள் இருக்கும் பகுதிக்கு சிறப்பு பஸ்களை இயக்கப்பட்டது. சென்னையில் நேற்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக காலை 6 மணி முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. சென்னையில் தேர்வு மையங்களுக்கு வெளியே ஏராளமான பெற்றோர், ஐஏஎஸ் தேர்வெழுதும் தங்களது பிள்ளைகளுக்காக காத்திருந்தனர், செல்போன்களுடன் வந்த தேர்வர்கள் பலர் அதனை தேர்வறைக்கு வெளியே பாதுகாவலர்களிடம் கொடுத்து விட்டு பத்திரமாக மீட்டனர், புதுச்சேரியில் நடைபெற்ற தேர்வை 3522 பேர் எழுதினர், பலர் அதனை தேர்வறைக்கு வெளியே பாதுகாவலர்களிடம் கொடுத்து விட்டு பத்திரமாக மீட்டனர், புதுச்சேரியில் நடைபெற்ற தேர்வை 3522 பேர் எழுதினர்,

முதற்கட்ட தேர்வை நேற்று காலை 9-30 மணிமுதல் 11-30 மணி வரை முதல் தாள் தேர்வும், 2-30 மணி முதல் 4-30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற்றது. இந்த முதற்கட்டத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இரண்டாம் கட்டத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர், இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வுக்கும் அடுத்து நேர்காணலுக்கு தகுதி பெற்றவர்களாவர், நேர்காணலில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தகுதி பெற்றவர்களாவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து