கிராமபுற சிறுக்கோயில் பூசாரிகளுக்கு 183- திருக்கோயில்களுக்கு ரூ.4 லட்சத்து 57 ஆயிரத்து 500 மதிப்பிலான பூஜை பொருட்கள்: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      கிருஷ்ணகிரி
2

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி அருள்மிகு ஆஞ்சனேயா சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வளாகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பாக திருக்கோயில்களுக்கு ஒரு கால பூஜை செய்வதற்கான பூஜை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ( 18.06.2017 ) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையங்கள் துறை உதவி ஆணையர் சி.நித்யா வரவேற்புரை நிகழ்த்தினார். கலெக்டர்சி.கதிரவன் தலைமையுரையும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் முன்னிலையுரை நிகழ்த்தினார்கள்.

பூஜை பொருட்கள்

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி 183- திருக்கோயில்களுக்கு ரூ.4 லட்சத்து 57 ஆயிரத்து 500 மதிப்பிலான பூஜை பொருட்கள் வழங்கி பேசியபொழுது:


மறைந்த முதலமைச்சர் அம்மா சட்டபேரவையில் அறிவித்தப்படி 2016-17 ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள 10 ஆயிரம் திருக்கோயில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அதன் படி பித்தளை தாம்பூலம், தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கும் மற்றும் தொங்கு விளக்கு ஆகிய பூஜை உபகரணங்கள் நமது மாவட்டத்தில் இன்று மட்டும் ரூ. 2500 வீதம், 183 - திருக்கோயில்களுக்கு ரூ. 4 லட்சத்து 57 ஆயிரத்து 500 மதிப்பிலான பூஜை பொருட்கள் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கிராமபுறங்களில் உள்ள 194 - சிறிய திருக்கோயில்களுக்கு தலா ரூ.2500 வீதம் 4 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் இப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

அம்மா ஒவ்வொரு துறைக்கும் பல்வேறு விதமான நலத்திட்டங்களை வழங்கியுள்ளார்கள். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில் புரனமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சம் எனவும், கும்பாபிஷேகம் செய்வதற்கான நிதிவுதவியும், சிறு கோயில்கள் கட்டுவதற்காக நிதிவுதவியும், தமிழக வழங்கி வருகிறது. நமது மாவட்டத்தில் 8 - திருக்கோயில்களில் நாளொன்றுக்கு 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ. 1 லட்சத்து 44 ஆயிரம் செலவிடப்படுகிறது. இந்த பூஜை பொருட்களை பெற்றுக்கொண்டு பூசாரிகள் அந்தந்த கோயில்களில் பொதுமக்களின்; வழிபாட்டுக்கு பூஜை மேற்கொள்ள வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்;சியில் தருமபுரி பால்உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் எஸ்.தென்னரசு, தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.என்.ஏ.கேசவன், கிருஷ்ணகிரி முன்னாள் நகர் மன்ற தலைவர் கே.ஆர்.சி. தங்கமுத்து, செயல் அலுவலர்கள் ராஜரத்தினம், சித்ரா, கோவிந்தராஜ், சத்யா, ஆய்வாளர் பாண்டியம்மாள், கோயில் செயலர் சசிகுமார், ராஜ் மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து