ஆரணியில் ரூ75 இலட்சம் மதிப்பில் நடைபாதை அமைப்பதற்காக பூமி பூஜை: அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      திருவண்ணாமலை
a MINISTER

ஆரணி கோட்டை மைதானத்தில் ரூ75 இலட்சம் மதிப்பில் நடைபாதை அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றதில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்பு.

 பூமி பூஜை

ஆரணி கோட்டை மைதானத்தில் 2017-18ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ75 இல்டசம் மதிப்பீட்டில் 650 மீட்டர் நீளம் 4.10 மீட்டர் அகலம் அளவில் ஆங்காங்கே 10இடங்களில் இருக்கைகள் பொருத்துதல் புல் தரை மற்றும் வண்ணச்செடிகளுடன் கூடிய நடைபயிற்சி யாளர்களுக்கான நடைபாதை அமைக்கப்படவுள்ளது. மேலும் நடைபாதைகளை சுற்றிலும் 50 அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்படவுள்ளது. இப்பணிக்காக பூமி பூஜையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று பூமி பூஜை செய்தார்.


அப்போது உடன் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி சேவல் ஏழுமலை, முன்னால் ஒன்றியகுழுத்தலைவர் க.சங்கர், ஆணையாளர் குமலக்குமாரி, பொறியாளர் சி.ரவி, பேரவை பாபு, பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், முன்னால் கவுன்சிலர் திருமால், உள்ளிட்டோர் கலந்து கோண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து