துணை மின்நிலையம் அமைக்கும் இடம்: தாசில்தாருடன் எம்.எல்.ஏ சு.ரவி ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      வேலூர்
IMG-20170618-WA0027

அரக்கோணம் அருகே துணை மின்நிலையம் அமைக்கும் இடத்தினை தாசில்தார் பாஸ்கருடன்; எம்.எல்.ஏ சு.ரவி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம் நகரம் அருகில் அனைகட்டாபுத்தூர் ஊராட்சி கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் மின்சாரத் துறையின் சார்பில் துணை மின் நிலையம் அமைக்க போதிய இடம் தேர்வு செய்யப்பட்டது

துணை மின்நிலையம்

மின்துறையினரால் தேர்வு செய்யப்பட்ட அந்த இடத்தினை நேற்று முன் தினம் அரக்கோணம் தாசில்தார் பாஸ்கரை அழைத்து சென்று சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி நேரிடை ஆய்வு நடத்தினார். அப்பொழுது காவேரிபாக்கம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சம்பத், முன்னாள் அரக்கோணம் ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தன், புதுகேசாவரம் அதிமுக கிளை செயலாளர் நவாஸ், ஓய்வு பெற்ற ஆசிரியர் சண்முகம். உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.


 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து