மத்திய அரசு நடத்தும் குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வு கேயம்புத்தூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் சிறப்பாக நடைபெற்றது மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      கோவை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வு

கோயம்பத்தூர் மாவட்டத்தில் 22 மையங்களில் தேர்வு இன்று(18.06.2017) நடைபெற்றது. நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புனித மரியண்னை மேல்நிலைப்பள்ளி, புனித மைக்கல் மேலநிலைப்பள்ளி, புனித காணிக்கை அன்னை மேல்நிலைப்பள்ளி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வு மையமான சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்த தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர்  தெரிவிக்கையில் மத்திய  அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இன்று முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளாக குடிமைப்பணி முதனிலை போட்டித் (Pசநடiஅiயெசல) தேர்வுகள் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 22 மையங்களில் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த 8748 நபர்களில் 3943 நபர்கள் தேர்வெழுதினர், 4805நபர்கள் தேர்வெழுதவில்லை. இத்தேர்வினை சிறப்பாக நடத்தவும், அவற்றினை கண்கானிக்கவும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கோவை மாவட்ட ருPளுஊ தேர்வு கண்காணிப்பு அலுவலர் ஃ தமிழக மின் ஆளுமைத்திட்ட ஆணையர் ஆனந்தராஜ் விஷ்ணுபாட்டில்   நியமிக்கப்பட்டிருந்தார்கள். ருPளுஊ தேர்வு கண்காணிப்பு அலுவலர் அவர்களும் அனைத்து மையங்களிலும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், துணை கலெக்டர் நிலையில் 7 மொபைல் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு மையத்திற்கும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 43 உதவி மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் அவற்களும் சிறப்பான முறையில் பணியாற்றினர்.


இத்தேர்வினை சிறப்பாக நடைபெற பணியாற்றிய அனைத்து அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து