முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாராபுரம் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள குறைகளை கேட்டறிந்து அலுவலர்களுக்கு நடவடிக்கை எடுக்க அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் 17.06.2017 அன்று குடிநீர் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி   தலைமையில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன்  ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது,
 
தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளிலும் தனித்தனியே பொது மக்களிடம் குறைகள் கேட்டறிந்ததுடன் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கிட தற்பொழுது ஆழ்துளை கிணறுகளில் இயங்கி வரும் மின் மோட்டார்களை மாற்றி அதிக மின் திறன் கொண்ட மோட்டார்கள் பொருத்தப்பட்டு சீராக குடிநீர் வழங்க உத்தரவு இடப்பட்டுள்ளது. அதே போல் மிக அத்தியாவசியமான இடங்களில் வாகனங்கள் மூலமாகவும் குடிநீர் வழங்க நகராட்சித்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி சாலை வசதிகள், மற்றும் தெரு விளக்குகள் அமைத்தல், கழிவு நீர் கால்வாய் சீர் செய்யும் பணி போன்றவற்றையும் கண்கானிக்கப்பட்டு உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது. இதே போல் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பேரூராட்சி பகுதிகளிலும் எல்லோருக்கும் சீராக குடிநீர் கிடைக்கும் வகையில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருவதுடன் ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறுகளையும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக எல்லோருக்கும் நன்றாக தெரியும் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வறட்சி என்றாலும் திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை அதிக அளவு வறட்சி நிலவி வருகிறது. காரணம் 140 ஆண்டுகளுக்கு  முன்பு இதே போல் மழை பொய்த்ததன் காரணமாக வறட்சி ஏற்பட்டது. அன்று ஏற்பட்ட சூழ்நிலைபோல் தற்போது நிழவி வருகிறது. இதை சமாளிக்கும் வகையில் பொது மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பாதுகாத்திட வேண்டும். மாண்புமிகு அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக  பல ஆண்டுகளுக்கு பின்பு தற்பொழுது அனைத்து ஏரிகள்,குளங்கள்,கால்வாய்கள், தூர்வார உத்தரவிட்டு அனைத்து பகுதிகளிலும் நல்ல முறையில் பணிகள் நடைபெற்ற வருகிறது. இதனால் வரும் மழை காலத்தில் போதிய அளவு  தண்ணீர் தேக்கிவைப்பதன் மூலம் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்யவும் மற்றும் விவசாய பணிக்கும் பயனள்ளதாக இருக்கும் என  மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன்  தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வகுமார சின்னையன், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.காளிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, தாராபுரம்  சார் கலெக்டர் செல்வி.கிரேஸ்பச்சாவு,, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட மற்றும்  பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து