கோபி அங்கன்வாடிக்குழந்தைகளுக்கு முன் பருவச்சான்றுகள் அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      ஈரோடு

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற விழாவில் அங்கன்வாடிக்குழந்தைகளுக்கு முன் பருவ கல்விச்சான்றிதழ்களை தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுவரும் நிலையில் தனியார் மழலையர்பள்ளிகளில் அதிகளவில் குழந்தைகளை சேர்க்கை நடைபெற்றுவருவதால் அங்கன் வாடிப்பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை அங்கன்வாடிக்குழந்தைகளின் கல்வித்தரத்தை உயர்த்திவருவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன் பருவச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவருவதாகவும் தமிழ் வழிக்கல்வியை மேம்படுத்தவும் அரசு பள்ளிகளில் குழந்தைகளின் சேர்கையை அதிகரிக்கவும் அங்கன்வாடிப்பள்ளிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு சிறந்தமுறையில் செயல்பட்டுவருவதாகவும் அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து