கோபிசெட்டிபாளையம்பகுதியில் ரூ.2.12 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      ஈரோடு

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.2.12 கோடி மதிப்பீட்டிலான  பல்வேறு திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்  இன்று மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் தலைமையில், பள்ளிக்கல்வி, விளையாட்டு துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சத்தியமங்கலம் உட்கோட்டத்தில் சிறு பாலம் மற்றும் கோபி உட்கோட்டத்தில் தார்சாலை புதுப்பித்தல் ஆகிய பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உடையாக்கவுண்டன்பாளையம் பிரிவில் மங்களாபுரம் முதல் ஊஞ்சப்பாளையம் வரை உள்ள சாலையை மேம்படுத்துவதற்காக ரூ.37 இலட்சம் மதிப்பீட்டில் 2 இடங்களில் குழாய் பாலங்கள் புதுப்பித்து 2.20 கி.மீ நீளம் தார்சாலை ஆகியவை அமைக்கப்படுவதற்கான பணிகளையும், மேலும் சத்தி முதல் அத்தானி வழியாக பவானி செல்லும் சாலையில் குறுகிய தாம்போகி பாலத்திற்கு பதிலாக சிறு பாலம் ரூ.1.75 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 2 பணிகளுக்கு ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சோமசுந்தரமுருகன், உதவி இயக்குநர்கள் ரத்தினசாமி, குப்புசாமி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து