முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் ரசிகர்களுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்ன அறிவுரை

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      சினிமா
Image Unavailable

சென்னை : பட்டமளிப்பு விழாவில் விஜய் ரசிகர்களுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவுரைகள் பல வழங்கியுள்ளார்.  இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என சினிமாவில் பன்முகம் கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளார்.

சென்னையில் நடந்த இந்த விழாவில் பட்டத்தை பெற்றுக்கொண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது,

40 வருடங்களுக்கு முன் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த நான் இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் உழைப்புதான். உழைப்பு ஒரு மனிதனை எப்போதுமே கைவிடாது என்பதற்கு என்னை நானே உதாரணமாக சொல்லிக் கொள்வேன். எனது மகனாக இருந்தாலும் விஜய் கடுமையாக உழைத்ததால்தான் இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறார். இந்த உயரத்தை அவர் அடைந்துவிட்டாலும் இன்னும் அவர் கடினமாக உழைத்து கொண்டுதான் இருக்கிறார். விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் என்னுடைய பிள்ளைகள்தான். அவர்களுக்கும் நான் உழைப்பைத்தான் கற்றுக் கொடுத்திருக்கிறேன். ஓய்வு என்பதே எனக்கு பிடிக்காது. பெரிய பெரிய ஜாம்பவான்களை உருவாக்கியிருக்கிறோம், சாதனைகள் பல செய்துவிட்டோம் என்று நான் ஒருநாளும் எண்ணியது கிடையாது. புகழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டால் வளர்ச்சி அடங்கிப் போய்விடும். நான் என் அம்மாவை 25 வருடம் என்னுடைய வீட்டில் மகாராணியாக வாழ வைத்தேன். எனது அம்மாவின் மகிழ்ச்சி அதிகரிக்க அதிகரிக்க என்னுடைய வளர்ச்சியும் பல மடங்கு உயர்ந்தது. அதேபோல்தான் விஜய்யும். எந்த படப்பிடிப்பு இருந்தாலும் ஒருமுறையாவது அவரது அம்மா ஷோபாவை பார்க்காமலோ பேசாமலோ இருக்கமாட்டார். அதனால்தான் கடவுள் விஜய்யை இந்த உயரத்தில் வைத்திருககிறார். விஜய் ரசிகர்களுக்கும், அனைத்து தரப்பினருககும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், அனைவரும் அவரவர் தாயை நேசியுங்கள். அவர்களை சந்தோஷப்படுத்துங்கள். அப்படி செய்தால் நீங்கள் நினைப்பதெல்லாம் உங்கள் காலடியில் கிடக்கும். உங்களால் முடிந்த அளவுக்கு தொண்டு செய்யுங்கள். தொண்டனாக இருக்கும் ஒருவனால் மட்டும்தான் தலைவனாக முடியும், முதல்வனாக முடியும். இவ்வாறு அவர் பேசினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து