முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடர்: பாகிஸ்தானை 7-1 என வீழ்த்தியது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : லண்டனில் நடைபெற்று வரும் ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடரில் இந்தியா 7-1 என பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

அரையிறுதி தொடர்

ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. அயர்லாந்து, கனடாவை வீழ்த்திய இந்தியா, நேற்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்தியது.இந்த போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா 7-1 என பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

இந்தியா வெற்றி

இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்களும், தல்விந்தர் சிங் 2 கோல்களும், ஆகாஷ் தீப் இரண்டு கோல்களும், பிரதீப் மோர் ஒரு கோலும் அடித்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது உமர் பூட்டா ஒரு கோலும் அடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து