ஏழைகளுக்காக கொண்டாடப்படும் திருவிழா ரமலான் மூசா - பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      திண்டுக்கல்
odc news 2

ஓட்டன்சத்திரம், - ஏழை மக்களுக்காக கொண்டாடப்படும் திருவிழா தான் ரமலான் என்று திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், தாராபுரம் சாலை, எஸ்.ஏ.எம். யூசுப்;ராவுத்தர் திருமண மஹாலில் தமிழ்நாடு சிறுபாண்மை மக்கள் நலக்குழு சார்பில் நடந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மத நல்லிணக்க விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில துணை அமைப்பாளர் மூசா பேசியுள்ளார்.
 இவ்விழாவிற்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஜெ.ஜபருல்லாகான் தலைமை வகித்தார். இவ்விழாவில் சி.முகம்மதுரபீக், என்.சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையம் சிறுபான்மை மக்கள் நலக்குழு எம்.ஏ.ஜின்னா வரவேற்று பேசினார். முன்னதாக இவ்வழாவில் நகர ஜமாத் தலைவர் எம்.ஒய்.பசிர் அகமது, செயலாளர் எம்.கே.சேக் அப்துல் காதர், தர்கா பள்ளி துணை தலைவர் எஸ்.ஏ.முகமது இப்ராகிம்,  பொருளாளர் எஸ்.கே.ஜின்னா, சத்திரப்பட்டி காந்தி சேவா சங்க நிறுவனர் மா.வன்னிக்காளை, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி, வடக்கு பள்ளி வாசல் தலைவர் எஸ்.ஏ.எம்.சகாபுதீன், செயலாளர் எம்.ஒய்.ரஹ்மான்சேட், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் வ.கல்யாணசுந்தரம், சத்திரப்பட்டி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மு.கருணாகரன், சிறுபான்மை மக்கள் நலக்குழு தலைவர் எ.அரபு முகமது. ஒட்டன்சத்திரம் மருத்துவர் டாக்டர்.என்.கருப்பண்ணன், பொருளாளர் கே.சௌக்கத் அலி, சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் பி.கே.கருப்புச்சாமி, சிவமணி, வழக்கறிஞர் கே.சின்னக்கருப்பன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் எஸ்எம்ஆர் நியூஸ் பப்ளிக்கேசன்ஸ் ஏஜென்சி எம்.சேக் முஜிபுர் ரஹ்மான் நன்றி கூறினார்.  இவ்விழாவில் கலந்து கொண்ட மூசா பேசியதாவது.
  சிறுபான்மை மக்கள் தங்கள் உரிமைகளை பிற சமூகத்தினர் உதவி இல்லாமல் போராடி வெற்றி பெற முடியாது. அதனால் எங்கள் அமைப்பில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள். இஸ்லாமியர்கள் என அனைத்து மதத்தினரும்  உள்ளனர். எல்லாவற்றுக்கு தீர்வை சொல்கிறது இஸ்லாம். ஜக்காத் என்பது தர்மம் மட்டுமல்ல செல்வ வரி என்பதாகும். ஒரு இஸ்லாமியர் தனது சொத்தில்  இரண்டரை சதவீதம் தனது செல்வ வரியை கொடுக்க வேண்டும் என்கிறது. தொழுகை, நோன்பு, கலிமா, ஜக்காத். ஹஜ் யாத்திiரை ஆகிய  5 கடமைகளில் 4 கடமைகளை செய்தால் மற்றவர் பயன்பெற மாட்டார்கள். அதனால் தான் ஜக்காத்தை வலியுறுத்தி இந்த ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஜக்காத்தால் பிறர் பயனடைவார்கள். உலகில் தர்மம் செய்வதற்காகவே விழாவை நடத்துகிற மதம்  இஸ்லாம். நாம் ஜக்காத்தை கொடுக்கிறோமா. ஒரு கோடிஸ்வரன் 2 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்க வேண்டும். தனது சொந்த சகோதரன் ஏழையாக இருந்தால் அவனுக்கே கொடுக்கலாம். பிறகு மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த கடமைகள் 5ல் ஒரே ஒரு கடமையை பகிரங்கமாக சொன்னது இஸ்லாம். நீங்கள் தொழுவது அனைவருக்கும் தெரியும். ஹஜ்சுக்கு போவது தெரியும். இஸ்லாமிய மாதம் 12ல் 3 கடமையில் ஒரே மாதத்தில் செய்வது இந்த ரமலான் மாதத்தில் தான்.  இந்த வாய்ப்பு ரமலானில் மட்டும் தான் உள்ளது. ஆகவே அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். .ஏழைகளுக்கு செய்யும் ஜக்காத்தை அதாவது செல்வ வரியை நீங்கள் கொடுத்து உங்கள் செல்வத்தை தூய்மைப்படுத்துங்கள் என்கிறது இஸ்லாம் என்று மூசா பேசினார். 
 
கே.பாலபாரதி (சிபிஎம்)
எல்லா மதங்களும் அன்பை தான் போதிக்கின்றன. வியர்வை உலருமுன் கூலியைக் கொடுக்க வேண்டும் என்று முகமது நபி சொல்லியிருக்கிறார். பிறப்பில் ஆண், பெண் பேதம் பார்க்கக்கூடாது என்றும் ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி என்றும் பேதம் பார்க்கக்கூடாது என்று அவர் வாழ்ந்த காலத்தில் வலியுறுத்தினார். அப்படிப்பட்ட கொள்கைகளைக்கொண்டது தான் இஸ்லாம் சமூகம் என்பதை நாங்கள் அறிவோம். சிறுபான்மை நலக்குழு கோரிக்கையின்படி தான் திண்டுக்கல்லில் திப்புசுல்தான் மணிமண்டபத்தை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிக்கொடுத்தார். அந்த வகையில் சிறுபான்மை நலக்குழு அமைத்துக்கொடுத்துள்ள இந்த விழாவிற்கு வருகை தந்தவர்களை வருக வருக என வரவேற்பதில் பெருமைபடுகிறேன் என்று பாலபாரதி பேசினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சிறுபான்மை மக்கள் நலக்குழு சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து