முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி சாம்பியன் டிராபி கிரிக்கெட் : 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று கோப்பையை கைப்பற்றியது பாகிஸ்தான்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு 339 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் வித்தியாசத்தில்  பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வியுற்றது. முதல் முறையாக பாகிஸ்தான் கோப்பையை வென்றுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது பரம வைரியான பாகிஸ்தான் அணியுடன் நேற்று பலப்பரீட்சை தொடங்கியது. மத்திய அரசு, பாகிஸ்தான் அணியுடனான இருதரப்பு போட்டிக்கு அனுமதி மறுத்து வருவதால், உலகளாவிய அளவிலான தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதும் சூழ்நிலை உருவாகியது. இதுவும் நேற்றைய இறுதிப் போட்டியின் சுவாரஸ்யத்தை அதிகரித்தது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. ஃபக்கர் ஸமான் அதிகபட்சமாக 114 ரன்கள் எடுத்தார். அஸார் அலி 59 ரன்கள் எடுத்தார்.

இந்திய பவுலர்கள் புவனேஸ் குமார், ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இந்திய அணி ஆட்டத்தை துவங்கியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக  ரோஹித் சர்மா, விராட்கோலி, டோனி ,யுவராஜ்சிங், சிகர்தவான் ஆகியோர் அடுத்தடுத்து  ஆட்டம் இழந்தனர். அடுத்த களம் இறங்கிய பாண்டியா, அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்களும் மளமளவென பெவிலியன் திரும்பினர். 180 ரன்கள் வித்தியாசத்தில்  பாகிஸ்தான் வெற்றிபெற்று முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது. 158 ரன்களுக்கு 30.3 ஓவரிலேயே இந்தியா ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் முழ்கினர். சில இடங்களில் விராட்கோலியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து