முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்ச்சுகல் நாட்டில் பயங்கரம் காட்டுத் தீயில் சிக்கி 62 பேர் பலி

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

லிஸ்பன் : போர்ச்சுகலில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 62 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஐரோப்பாவின் தென்மேற்கில் போர்ச்சுகல் அமைந்துள்ளது. அதன் தலைநகர் லிஸ்பனுக்கு வடகிழக்கில் 150 கி.மீ. தொலைவில் பெட்ரோகோ கிராண்டி வனப்பகுதி உள்ளது. அங்கு தற்போது 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி வருகிறது.

இதன் காரணமாக பெட்ரோகோ கிராண்டி வனப்பகுதியில் நேற்று  இரவு காட்டுத் தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக வனப் பகுதி முழுவதும் தீ மளமளவென்று பரவியது.

அப்பகுதி நெடுஞ்சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். 30 பேர் காரிலேயே கருகி உயிரிழந்தனர். அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மேலும் 32 பேர் தீயில் சிக்கி பலியாகினர். சுமார் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.  தீயின் உக்கிரத்தால் பல கிராமங்கள் அழிந்துவிட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 700-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரவு பகலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் போர்ச்சுகலுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளன. அந்த நாடுகளைச் சேர்ந்த விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தீயை கட்டுப்படுத்த வனப்பகுதியில் தண்ணீரை தெளித்து வருகின்றன.

போர்ச்சுகல் பிரதமர் அந்தோனியோ கோஸ்டா கூறியபோது, இது மிகவும் மோசமான தீ விபத்து. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சுகிறோம். தீயை கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகிறோம். பாதிக்கப்பட்ட கிராமங்களில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து