கொலம்பியா குண்டுவெடிப்பில் 3 பெண்கள் பலி

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      உலகம்
colombia-blast 2017 6 19

பகோடா : தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள கொலம்பியாவின் தலைநகரம் பகோடா. அந்த நகரில் பிரபல வணிக வளாகம் உள்ளது. அங்கு நேற்று  மாலையில் பெண்கள் கழிவறை பகுதியில் வெடிகுண்டு வெடித்துச் சிதறியது.

இதில் பிரான்ஸைச் சேர்ந்த ஜூலி (23), கொலம்பியாவைச் சேர்ந்த அனா மரியா (27), லேடி பவுலா (31) ஆகிய மூன்று பெண்கள் படுகாயம் அடைந்தனர். உடனடி யாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் மூவரும் உயிரிழந்தனர். குண்டுவெடிப்பில் மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

“இது ஒரு தீவிரவாத தாக்குதல்” என்று கொலம்பிய போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த அமைப்பு தாக்குதலை நடத்தியது என்பது தெரியவில்லை.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து