முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பா.ஜ.க சார்பில் போட்டியிடும்  ஜனாதிபதி வேட்பாளராக பிகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை ஆதரிக்கும்படி பிரதமர் மோடி பல்வேறு தலைவர்களை வலியுறுத்தி வருகிறார்.  தமிழகத்தில் அதிமுக விடமும் அவர்  ஆதரவை கோரியுள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்

முன்னதாக, ஜனாதிபதி வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பாக பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று  நடந்தது.
சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர், பாஜக ஜனாதிபதி வேட்பாளராக பிகா ர் கவர்ன ர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

23-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ராம்நாத் கோவிந்த் வரும் 23-ம் தேதி தாக்கல் செய்வார் என அமித் ஷா அறிவித்தார். பாஜகவின் தேர்வு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வேட்பாளர் தேர்வை அனைவரும் ஒப்புக்கொள்வர் என நம்புவதாகவும் அவர் கூறினார். ராம்ராத் கோவிந்த் ஒரு தலித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பயணத்துக்கு முன்..

பிரதமர் மோடி போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளுக்கு வரும் 24-ம் தேதி தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். அதற்கு முன்பாக பாஜக ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும் என கட்சி மேலிடம் முடிவு செய்தது.

அதன்படி, ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்காக அமைக்கப்பட்ட அமித் ஷா, அருண் ஜெட்லி, வெங்கய்யா நாயுடு, ராஜ்நாத்சிங் ஆகியோர் அடங்கிய குழுவினர் பாஜக வேட்பாளரை தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த மாதம் 25-ம் தேதி முடிகிறது. அதற்கு முன்னர் ஜூலை 17-ம் தேதி புதிய ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் நடக்கிறது.

காங்கிரஸ் மற்றும எதிர்கட்சிகளி்ன்  சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் ப ற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் சோனியாவை  மத்திய அமைச்சர்கள்  அருண் ஜெட்லி, வெங்கய்யா நாயுடு, ராஜ்நாத்சிங் ஆகியோர்  சந்தித்து பேசினார்கள். ஆனால் காங்கிரஸ் அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. ஒரிரு நாளில் இது குறித்து காங்கிரசும்  முடிவு எடுத்து அறிவிக்க உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து