காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு, மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      தமிழகம்
ragul

Source: provided

சென்னை : காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு தி.மு.க எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 19ம் தேதியான நேற்று  தனது 47- வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தனது விட்டர் பக்கத்தில், "ராகுல் காந்திக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். எல்லா வளமும் நலமும் பெற்று, நாட்டின் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து பங்காற்றிட வேண்டுமென வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து