முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவார்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தகவல்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவார் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் அவரை நேற்று  அர்ஜீன் சம்பத் நேரில் சந்தித்தார். அவருடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சம்பத், "நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவார். அரசியலுக்கு வருவது குறித்து அவர் ஆலோசித்து வருகிறார். அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வருகிறார். இது அவர் அரசியலுக்கு வரவேண்டிய தருணம். அவரை பாஜக இயக்கவில்லை" என்றார்.

முன்னதாக நேற்று  ரஜினிகாந்தை தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பரவலாக பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில் அவரை கட்சித் தலைவர்களும், சங்க நிர்வாகிகளும் சந்திப்பது மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து