முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை வசம் உள்ள 16 தமிழக மீனவர்கள் மற்றும் 136 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 5 மீனவர்கள், அவர்கள் சென்ற படகுடன் நேற்று இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்கள் உட்பட இலங்கை சிறையில் உள்ள 16 தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை வசம் உள்ள 136 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர்  நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க செல்லும்போது, இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்டு, எண்ணற்ற துயரங்களுக்கு ஆளாவது குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர், 61 நாள் தடைக்காலத்திற்கு பிறகு, பாக் நீரிணைப் பகுதியில், மீன் பிடிக்க சென்றபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கையில் உள்ள காரைநகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், பாக் நீரிணைப் பகுதியில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்படும் சம்பவம் குறித்து, மறைந்த மாண்புமிகு அம்மா, பிரதமரின் கவனத்திற்கு பல முறை கொண்டு வந்துள்ளதையும் நினைவுகூர்ந்துள்ளார்.

எனவே, இப்பிரச்னைக் குறித்து, தூதரக வாயிலாக உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு, மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் சம்பவங்களை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இலங்கை கடற்படையினரால் நேற்று பிடித்து செல்லப்பட்ட 5 மீனவர்களுடன் இலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து, இலங்கை வசம் உள்ள 136 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து