முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில ஆவணத்துடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா? மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நில ஆவணங்களோடு ஆதார் எண்ணை உரிமையாளர்கள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும்,. ஆதார் எண் இணைக்காதவர்கள் மீது பினாமி பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று தற்போது  தகவல் வெளியாகியுள்ளது.

 முன்னதாக மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானது . அதில் முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றைக் காண்போம்,

• நில ஆவணங்களோடு ஆதார் எண்ணை உரிமையாளர்கள் கட்டாயம் இணைக்க வேண்டும்.

• ஆதார் எண் இணைக்காவிடில் பினாமி பணபரிவர்த்தனைக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

• 1950ம் ஆண்டு முதலான ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.

• ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் .

• மத்திய அரசின் மானியங்களை பெற ஆதார் எண் அவசியம் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

• மதிய உணவு முதல் வங்கிக்கணக்கு வரை ஆதார் எண் இணைக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

• இந்த நிலையில் ரியல்எஸ்டேட் துறையில் அதிகம் கறுப்பு பணம் புழக்கம் உள்ளதை கருத்தில் கொண்டு, நிலம் வாங்குபவர்கள், விற்பனை செய்பவர்கள் தங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டது.

அது உண்மையல்ல போலி கடிதம்

இதனிடையே மத்திய அரசு அனுப்பியதாக வெளியான கடிதம் போலியானது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் பெயரை வைத்து யாரோ விஷமம் செய்திருப்பதாகவும், போலி கடிதத்தை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்  அளிக்கப்பட்டுள்ளதாகவும்  மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து