முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தலில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க தனித்தனி நிறங்களில் வாக்குச் சீட்டு: தலைமை தேர்தல் ஆணையம்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் வாக்களிக்க தனித்தனி நிறங்களில் வாக்குச் சீட்டுகளைத் தலைமை தேர்தல் ஆணையம் பயன்படுத்த உள்ளது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 25-ம் தேதி முடிகிறது. அதற்கு முன்னர் 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் 776 எம்.பி.க்கள் (மாநிலங்களவையில் 233, மக்க ளவையில் 543), 4,120 எம்எல்ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.

தேர்தலில் எம்எல்ஏ.க்களின் வாக்குகளுக்கான மதிப்பு மாநிலத் துக்கு மாநிலம் மக்கள் தொகையின் அடிப்படையில் வேறுபடும். ஆனால், எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு மாறாது. எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு தலா 708. இதன்படி மொத்த வாக்கு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 903.

வாக்குபதிவு இயந்தரம் கிடையாது

இந்தத் தேர்தலில் எம்.பி., எம்எல்ஏ.க்கள் வாக்குச் சீட்டில் வாக்களிப்பார்கள். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. எனவே, இருவருக்கும் தனித்தனி நிறங்களில் வாக்குச் சீட்டு வழங்க தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி, எம்.பி.க்கள் பச்சை நிறம், எம்எல்ஏ.க்கள் பிங்க் (இளம்சிவப்பு) நிறத்தில் உள்ள வாக்குச் சீட்டில் வாக்களிப்பார்கள்.
இதற்கிடையில் வேட்பு மனு தாக்கலும் தொடங்கி விட்டது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஜூலை 1-ம் தேதி கடைசி நாள். ஒருவேளை ஒருமித்த கருத்து எட்ட முடியாமல், இரு தரப்பினரும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்து, ஜூலை 1-ம் தேதி மாலைக்குள் மனுவை வாபஸ் பெறாவிட்டால் தேர்தல் நடப்பது நிச்சயமாகி விடும்.

அதன்பிறகு வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணிகளைத் தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கி விடும். எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்குத் தனித்தனி நிறங்களில் வாக்குச் சீட்டுகளை வழங்க உள்ளதால், வாக்கு எண்ணிக்கையின் போது அவற்றின் மதிப்பை கணக்கிடுவது தேர்தல் ஊழியர்களுக்கு மிகவும் எளிதாகிவிடும். தேர்தல் முடிந்த வுடன் வாக்கு சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் அனைத்தும் மாநிலங் களில் இருந்து டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டுவிடும்.

தனித்தனி மொழிகளில் வாக்குச் சீட்டு

அருணாச்சலப் பிரதேசம், பிகார், சத்தீஸ்கர், ஹரியானா, இமாச்சல், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், உத்தராகண்ட், உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் மக்கள் பிரதிநிதிகள் வாக்களிக்க இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கப்படும்.

ஆனால், ஆந்திரா, அசாம், கோவா, குஜராத், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா, மேற்குவங்கம், புதுச்சேரி மாநிலங்களுக்கு இந்தி மொழி தவிர்த்து வேறு மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கப்படும். தலைமை தேர்தல் ஆணையம் வாக்குச் சீட்டுகளை டெல்லியில் அச்சடிக்கும்.

சிறப்பு பேனா பயன்படுத்தப்படும்

மேலும், தேர்தலில் வாக்களிக்க சிறப்பு பேனாவை பயன்படுத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறும்போது, ‘‘வாக்களிக்க வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு, வாக்குச் சாவடியில் உள்ள தேர்தல் அலுவலர் சிறப்பு பேனாவை வழங்குவார்.  அந்த பேனாவில்தான் வாக்குச் சீட்டில் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். வேறு பேனாவில் வாக்களித்தால், அது செல்லாததாகி விடும்’’ என்றார

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து