காஞ்சிபுரம் மாவட்டத்தில் திரைப்படத்தை குழந்தைகளுக்கு காண்பிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் : கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      காஞ்சிபுரம்
kanchipuram 2017 06 19

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்திய குழந்தைகள் திரைப்படம் சங்கம் மூலமாக திரையரங்குகளில் குழந்தைகள் திரைப்படம் காண்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.பொன்னையா அவர்கள் தலைமையில் நடைபெற்றது

கட்டணங்கள்

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறை சார்பில் இந்திய குழந்தைகள் திரைப்படச் சங்கத்தின் மூலம் குழந்தைகள் திரைப்பட விழா காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜீலை மாதத்தில் நடைபெறவுள்ளது. பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் திரையரங்குகளில் இலவசமாக இத்திரைப்படங்கள் திரையிட்டு காண்பிக்கப்படும்.

திரையரங்குகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை சிறப்பு காட்சியாக இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கத்தினரால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள் திரையரங்களில் திரையிட்டு காண்பிக்கப்படும். விலங்குகளிடத்தில் அன்பு செலுத்துதல், இயற்கையை பேணி பாதுகாத்தல், நட்புணர்வை வளர்த்தல், மாற்றுத்திறனாளிகளின் திறமையை வெளிப்படுத்துதல் குறித்த திரைப்படங்கள் பள்ளி மாணவர்களிடையே திரையிட்டு காண்பிக்கப்படும்.

திரைப்படங்கள் திரையிடும் திரையரங்களுக்கு செயல்பாட்டு செலவினமாக ஒரு காட்சிக்கு ரூ.2,500/- வீதம் திரையரங்குகளுக்கு வழங்கப்படும். முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் திரைப்படவிழா நடைபெறும் திரையரங்குகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று வருவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திரையரங்கு உரிமையாளர்கள் திரைப்பட விழா சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)..பர்கத் பேகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்.வை.ஜெயக்குமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆர்.ராஜரத்தினம், தமிழரசி,உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், சினிமா தொடர்பாளர் என்.எஸ்.பிச்சை பெருமாள், இந்திய குழந்தைகள் திரைப்பட விநியோக அலுவலர் தி.வி.எஸ்.அகிலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .இரா.சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து