முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்மிடிப்பூண்டியில் உலக யோகா தின விழிப்புணர்வு பேரணி

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      சென்னை
Image Unavailable

கும்மிடிப்பூண்டியில் உலக யோக தினத்தை முன்னிட்டு கைரளி யோகா மையம் சார்பாக யோகா விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.புதுகும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் கைரளி யோகா மையம் மற்றும் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் யோகா ஆய்வு மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை இணைந்து உலக யோகா தினத்தை முன்னிட்டு மாபெரும் யோகா விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள்.

2 கி.மீ துாரம்

இந்த யோகா விழிப்புணர்வு பேரணிக்கு கைரளி யோகா மைய நிறுவனர் ஏ.ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி பைபாஸ் வியாபாரிகள் சங்க தலைவர் வி.வி.ஆர்.அரசு, பொது செயலாளர் காமராஜ், அரிமா சங்க நிர்வாகி ரவிக்குமார். யோகா கலைமாமணி கண்ணன் முன்னிலை வகித்தனர்.

இந்த பேரணியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் கும்மிடிப்பூண்டி மகாராஜா அக்ரசன் மெட்ரிக் பள்ளி, எளாவூர் சகுந்தலம்மாள் மெட்ரிக் பள்ளி, சாமிரெட்டிக் கண்டிகை மதன்லால் கெமானி மெட்ரிக் பள்ளி, சென்னை கோயம்பேடு ராகுல் மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து சுமார் 1000 மாணவர்கள் கலந்துக் கொண்டு யோகா விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

இந்த பேரணியில் திறந்த வாகனத்தில் யோகா மாணவர்கள் பல்வேறு யோகக் கலைகளை பொதுமக்கள் முன்பு செய்து காட்டியவாறு பேரணியாக சென்றனர். இந்த பேரணியானது கும்மிடிப்பூண்டி பஜார் வழியே கோட்டக்கரை அடுத்த பிரித்வி நகரில் உள்ள மகாராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வரை சுமார் 2 கி.மீ தூரத்திற்கு நடைபெற்றது.

பேரணி முடிவில் யோகா கலைமாமணி கண்ணன் உள்ளிட்டோர் யோகக் கலையின் சிறப்பம்சங்களை எடுத்துக் கூறினார். மேலும் பள்ளி மாணவி ஆர்யஸ்ரீ கோகக் கலை குறித்து பாடல் பாடி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து