உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் அனுசரிப்பு

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      காஞ்சிபுரம்
Kanchipuram  2017 06 19

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஹேண்டு இன் ஹேண்டு தொண்டு நிறுவனம் சார்பில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணி மற்றும் உறுதி மொழி ஏற்ப்பு கைய்யெழுத்து இயக்கம், கலை நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் உத்திரமேரூர் தாலுக்கா அலுவலக வளாகத்தில் நடந்தது.

விழிப்புணர்வு

நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ராஜம்மாள் தலைமை தாங்கினார். ஹேண்டு இன் ஹேண்டு பொது மேளாளர் சுவாமிநாதன், துணை பொது மேளாளர் பிரேம்ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை மேளாளர் வெங்கட்ராமன், மோகனவேல் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்று, குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் விழிப்புணர்வு பதாகையினை திறந்து வைத்து, கையெழுத்து இயக்கதை துவக்கி வைத்தார். அதன்பின் கலை நிகழ்ச்சியோடு கூடிய பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது சன்னதி தெரு, பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில் கண்ட 5 குழந்தைகளை உத்திரமேரூர் ஒன்றியம் விசூர் கிராமத்தில் உள்ள பாரதியார் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளியில் சேர்க்க அக்குழந்தைகள் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர். நிகழ்ச்சியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் நம்பிராஜ், சைல்ட்லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதுநிலை ஒன்றிய மேலாளர் பொன்னுவேல் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து