அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் (பொ) எஸ்.தனசேகரன் தலைமையில் நடந்தது

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" மாவட்ட கலெக்டர் (பொ) எஸ்.தனசேகரன், தலைமையில் நேற்று (19.06.2017) நடைபெற்றது.
நடவடிக்கை
இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1271 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
மேலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில் மது குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்தி வாழும் 5 பயனாளிகளுக்கு கறவை மாடு வாங்க தலா ரூ.30,000ஃ- வீதம் ரூ.1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலைகளையும், சுற்றுலா மற்றும் பண்பாட்டு அறநிலையங்கள் துறை சார்பில் 20 நலிந்த கலைஞர்களுக்கு தலா ரூ.7,500ஃ- வீதம் ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நிதி உதவிக்கான காசோலையினையும், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் 54 பயனாளிகளுக்கு தலா ரூ.5,000ஃ- வீதம் ரூ.2 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் இலவச மோட்டார் பொறுத்திய தையல் இயந்திரங்களையும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 18 அங்கன்வாடி உதவியாளர்களுக்கு அங்கன்வாடி பணியாளராக பணி உயர்வு ஆணைகளையும் ஆகமொத்தம் 97 பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் (பொ) சே.தனசேகரன் வழங்கினார்.
இக்கூட்டத்தில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் (பொ) சீனிவாசன், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணநை;த குழந்தை வளர்ச்சித்திட்டம்) முனைவர்.பெ.ஜெயராணி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பாலாஜி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.