நாகை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சவுதியில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.1லட்சத்து 81 ஆயிரத்துக்கான காசோலை : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் வழங்கினார்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      நாகப்பட்டினம்
Nagai 2017 06 19

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தலைமையில் நடைபெற்றது.

கோரிக்கைகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 20 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்; குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 232 என மொத்தம் 252 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


இக்கூட்டத்தில் நலத்திட்ட உதவி கோரி விண்ணப்பித்தவர்கள் 7 பேரது மனுக்களை பரிசீலித்து, உடனடி தீர்வாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 நபருக்கு ரூ.6500 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், 3 பேருக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் மூன்ற சக்கர சைக்கிள், 1 நபருக்கு காதொலி கருவி மற்றும் 2 நபருக்கு மாதம் தோறும் ரூ.1000 வீதம் மாற்றுத்திறனாளிக்கான ஓய்வூதியம் வழங்க ஆணையினையும், குத்தாலம் வட்டம், திருவாவடுதுறை அஞ்சல் பாரகத் தெருவைச் சேர்ந்த முகமது கனி அப்துல் அஜிஸ் என்பவர் சவுதி அரேபியாவில் இறந்தமைக்காக தமிழக அரசிடமிருந்து வரப்பெற்ற இழப்பீட்டுத் தொகை (ரூ.1,81,818-)யினை அவரது வாரிசுகளான ரிஸ்வானா(மகள்), முகம்மது பைசல்(மகன்) ஆகியோருக்கு தலா ரூ.90,909-க்கான காசோலைகளையும் மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கருணாகரன், தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கோ.தேன்மொழி, மாற்றுத்திறனாளிகள் நர அலுவலர் சந்திரமோகன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து