முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி லட்டுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி : மாநில அரசின் நேரடி மானிய திட்டத்தின் மூலம் திருப்பதி லட்டுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்பட உள்ளது.

ஜி.எஸ்.டி வரி விதிப்பு திட்டம் ஜூலை 1ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு முன்னர் சேவை வரியிலிருந்து திருப்பதி தேவஸ்தானத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படவில்லை.

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம் குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, நாள் முழுவதும் அன்னதானம், சிற்றுண்டி, பால், காபி, டீ, மோர் ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால், இவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆந்திர அரசு வைத்த கோரிக்கையை, ஜி.எஸ்.டி. கவுன்சில் நிராகரித்தது. ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் கிடைக்கும் கோவில்களுக்கே வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆண்டுதோறும் ரூ.1,100 கோடி வரை வருவாய் ஈட்டும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு எப்படி வரி விலக்கு அளிக்க முடியும். மாநில அரசு நேரடி மானிய திட்டம் மூலம், தேவஸ்தானம் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யலாம். அல்லது குறைக்கலாம் என கவுன்சில் அறிவுறுத்தியது. இந்த நிலையில், மாநில அரசின் நேரடி மானிய திட்டத்தின் மூலம் திருப்பதி லட்டுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து