முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 568 மனுக்கள் பெறப்பட்டது : கலெக்டர் கு.ராசாமணி தகவல்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நேற்று (19.06.2017) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்; 568 மனுக்கள் பெறப்பட்டது என மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி, தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட கலெக்டர் அவர்களிடம் மனுக்களை அளித்தனர்.

 விளையாட்டு போட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.திருச்சி மாவட்டம், தமிழ்நாடு ஊசூ அசோசியேசன் சார்பாக 14வது ஜுனியர், சீனியர் பிரிவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி. பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், நெருஞ்சலக்குடி கிராமம், மாந்துறையை சேர்ந்த சரவணக்குமார் மயக்கம் அடைந்து கீழே விழுந்ததில் மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் அவரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு மருத்துவ நிதியுதவியாக ரூபாய் 25 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் இரவு காவலராக பணிபுரிந்து பணியிடைக்காலமான செல்வக்குமார் என்பவரது வாரிசுதாரரும், மனைவியுமான பெரியம்மாள் என்பவருக்கு கருணை அடிப்படையில் இரவு காவலராக பணியிடம் வழங்கி பணி ஆணையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும்; நிலம் தொடர்பான 124 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 17 மனுக்களும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட மற்றும் விதவை உதவித்தொகை கோரி 68 மனுக்களும், சத்துணவு அமைப்பாளர் மற்றும் வேலைவாய்ப்பு கோரியது தொடர்பான 117 மனுக்களும், ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புகுழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரி 28 மனுக்களும், புகார் தொடர்பான 07 மனுக்களும், கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரி 09 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், சலவைப் பெட்டி தொடர்பான 27 மனுக்களும், பென்சன், நிலுவைத்தொகை கேட்டல் மற்றும் ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நலவாரியம் தொடர்பான 13 மனுக்களும் மற்றும் 158 இதர மனுக்கள் என மொத்தம் 568 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.பஷீர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்பு திட்டம்) மீனாட்சி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து