கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டையில் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      விழுப்புரம்
court openinig 2017 06 19

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-ஐ மற்றும் கள்ளக்குறிச்சியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-ஐஐ    சென்னை உயர்நீதிமன்ற முதன்மை   நீதியரசர் இந்திரா பானர்ஜு   சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் நூட்டி இராம் மோகன ராவ்   சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இவ்விழா உளுந்தூர்;பேட்டை சக்கரவர்த்தி லலிதா திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. விழாவில்,  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  பேசியதாவது:

 சொந்த கட்டிடத்தில் நீதிமன்றங்கள்

தமிழகத்தில் நீதித்துறையானது சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் 100 சதவிகிதம் அரசு சொந்த கட்டடத்தில் இயங்கிவருகின்றது.  விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்ப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மேலும்  அனைத்து வட்டத்திலும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களை கொண்டுவர தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்படும். உளுந்தூர்பேட்டையில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-ஐ கொண்டுவரவேண்டும் என இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் மறைந்த  முன்னால் முதலமைச்சர் அம்மா அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையின் அடிப்படையில் அம்மா  உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நீதித்துறையின் மானிய கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார்கள்.

ரூ.659கோடி ஒதுக்கீடு

உளுந்தூர்பேட்டையில் சார்பு மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் அமைய உங்களுக்கு உறுதுனையாக இருந்த உங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றியினை தெரிவிக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அனைத்தையும் அப்படியே இந்த அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த ஓரு அண்டு மட்டும் ரூ.659கோடி நீதித்துறைக்கு  ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீதித்துறைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர இவ் அரசு முனைப்பாக உள்ளது. என  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  தெரிவித்தார்கள்;. 

பலர் பங்கேற்பு

இவ்விழாவில், மாவட்ட முதன்மை நீதிபதி;கள் பி.சரோஜினி தேவி, எம்.சுபா அன்புமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, பாராளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் க.காமராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.குமரகுரு, அ.பிரபு, தமிழ்நாடு கூட்டுறவு சக்கர ஆலை இணைய தலைவர் கே.ஜி.பி. ஞானமூர்த்தி, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் கதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து