கடலூர் மாவட்டத்தில் தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டு விழிப்புணர்வு முகாம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      கடலூர்
cuddalure collector 2017 06 19

டலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை அங்கன்வாடி மையத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு கட்டுபபாட்டு இருவார முகாமினை கலெக்டர் டி.பி.ராஜேஷ்,    குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.            இந்நிகழ்ச்சியில் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   தெரிவித்ததாவது.

 சிறப்பு முகாம்

நமது நாட்டில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் 10 சதவிகித குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறக்கின்றார்கள். இதை தடுக்கவே தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டு இருவார முகாம் நடைபெறவுள்ளது. நமது மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 2,48,286 குழந்தைகள் பயனடைகின்றனர். அதற்கு தேவையான ஓஆர்எஸ் மற்றும் துத்தநாக மாத்திரைகள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. இந்த தீவிர முகாம் ஜுன் 19 முதல் ஜுலை 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஓஆர்எஸ் பாக்கெட்

இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தனியார் குழந்தை நல சிறப்பு மருத்துவமனை ஆகிய மையங்களில் உப்புகரைசல் நீர் வயிற்றுப்போக்கு ஏற்படும் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் வீடு வீடாக சென்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் பாக்கெட் வழங்கப்படவுள்ளது.வயிற்றுப்போக்கு ஏற்பட்ட குழந்தைக்கு ஓஆர்எஸ் பொடியை 1 லிட்டர் சுத்தமான தண்ணீரில் போட்டு நன்றாக கலக்கி சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும். தயார் செய்த ஓஆர்எஸ் கரைசலை 24 மணி நேரத்திற்குள்ளாக பயன்படுத்த வேண்டும். துத்தநாக மாத்திரையை தொடர்ந்து 14 நாட்கள் (வயிற்றுப்போக்கு நின்ற பின்னரும்) கொடுக்கவேண்டும். வயிற்றுப்போக்கின் போது தாய்ப்பாலை தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.குழந்தைக்கு உணவூட்டுவதற்கு முன்பும், மலம் கழுவிய பின்னரும் உங்களுடைய கைகளை சோப்புப் போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். துத்தநாக மாத்திரை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு விரைவில் குணமடையும் மற்றும் அடுத்து வரும் 3 மாதங்கள் வயிற்றுப்போக்கு, நிமோனியாவில் இருந்து காக்கும். இது உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டது.

நோய் வராமல் தடுக்கலாம்

மேலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எடை எடுக்கப்பட்டு சத்து குறைவான குழந்தைகளை அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிக்சை பெற அனுப்பி வைக்கப்படும். பிறந்த குழந்தைகளுக்கு சுகாதாரமான முறையில் 6 மாத காலங்கள் வரை தாய்ப்பால் ஊட்டும் முறையும், 6 மாதத்திற்குபின் இணை உணவு வழங்கும் முறையை பின்பற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு அளிக்கப்படும். குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதால் நோய் எதிர்ப்புச் சத்தியையும், சிறந்த ஊட்ட சத்தினையும், புத்திக் கூர்மையினையும் பெறுகிறார்கள். தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக மற்றும் கர்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கலாம். பள்ளி குழந்தைகளிடையே கைக்கழுவுதல் முறைகள் விளக்கி காட்டப்படும். கை கழுவுதல் என்பது 20 முதல் 30 வினாடிகள் வரை சோப்பை கொண்டு நன்கு தேய்த்து சுத்தம் செய்தல் வேண்டும் அப்போதுதான் நம் கைகளில் உள்ள கிருமிகள் அழிந்து வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.மேலும் இம்மாவட்டத்திலுள்ள அனைத்து நீர்நிலை தொட்டிகளிலும் பிளிச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்து தினமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதன் மூலம் வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் முற்றிலுமாக தவிர்க்கவேண்டும் என கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   கேட்டுக்கொள்கிறார்

லர் பங்கேற்பு

இத்துவக்கவிழாவில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் கே.ஆர்.ஜவஹர்லால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், தேசிய சுகாதார இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பரிமேலழகன், கடலூர் நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் குமரகுரு, புதுப்பாளையம் நகர மருத்துவ அலுவலர் டாக்டர் கவிதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி மோனிசா, அங்கன்வாடி பணியாளர்கள் கே.லதா, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் மகேஸ்வரி, நேர்முக உதவியாளர் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து