முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் 30ம் தேதி நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இந்தியாவே திரும்பிபார்க்கும் விழாவாக அமைய வேண்டும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      மதுரை
Image Unavailable

மதுரை,0-     மதுரையில் 30ம் தேதி நடைபெறும் நூற்றாண்டு விழா இந்தியாவே திரும்பிபார்க்கும் வகையில் மாபெரும் விழாவாக அமைய  வேண்டும் என்று மதுரை மாநகர் மாவட்ட  அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சூளுரை ஏற்று பேசினார்.
ஆலோசனை கூட்டம்
      தமிழக அரசின் சார்பில் 32 வருவாய் மாவட்டங்கள் தோறும் எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடைபெறுவதையொட்டி அதன் தொடக்க விழா மதுரையில் வருகின்ற 30ம் தேதி நடைபெறுகிறது அதில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதனையொட்டி மதுரை மாநகர் மாவட்ட  அதிமுக சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது  இக்கூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமா செல்லூர் கே.ராஜு தலைமை தாங்கினார். மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
      இக்கூட்டத்திற்கு மாநில  அவைத்தலைவரும், பள்ளிகல்வித்துறை அமைச்சருமான  கே.ஏ.செங்கோட்டையன், அமைச்சர்கள்  திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.காமராஜ், கே.பி.அன்பழகன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் மருதராஜ், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர்.ராஜாங்கம், மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் புதூர் கே.துரைப்பாண்டி, சி.தங்கம், ஜெ.ராஜா, பகுதி  செயலாளர்கள், ஏ.கே.முத்துஇருளாண்டி, வி.கே.எஸ்.மாரிச்சாமி, எம்.எஸ்.செந்தில்குமார், எம்.ஜெயபால், தளபதிமாரியப்பன், பி.எஸ்.கண்ணன், என்.முருகன், கே.ஜெயவேல், பூமிபாலகன், பைக்காரா பி.கருப்புசாமி, பரவை ராஜா, மாவட்ட அணி நிர்வாகிகள் எஸ்.டி.ஜெபாலன், கா.டேவிட்அண்ணாத்துரை, பெ.இந்திராணி, தமிழ்செல்வன், ரமணி, மாணிக்கம், ஜி.என்.அன்புசெழியன், மற்றும் கிரம்மர்சுரேஷ், சண்முகவள்ளி, சக்திமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது
 எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் தான் முதன் முதலாக நடைபெறும் என்று கூறினார். அதன் படி மதுரையில் வருகின்ற 30ம் தேதி சிறப்பாக நடைபெறுகிறது இதனை தொடர்ந்து 32 வருவாய் மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெறுகிறது  மறைந்த முதல்வர் அம்மா  எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை மதுரையில் நடத்த வேண்டும் என்று விரும்பினார். அம்மாவின் விருப்பத்திற்கிணங்க சிறப்பாக நடைபெறுகிறது இந்த நூற்றாண்டு விழா இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் வகையில் அமையும்  என்றார்.
 
அமைச்சர் காமராஜ் பேசியதாவது
      வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் என்றும் நிலையாக நிற்கும் எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா அரசின் சார்பில் கொண்டாடப்படுகிறது இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்பது அம்மாவின் லட்சியமாகும் 100 ஆண்டு காலம் அதிமுக மக்கள் பணி ஆற்றும் வகையில் இந்த பிறந்தநாள் விழா இருக்க வேண்டும் மதுரையில் வருகின்ற 30ம் தேதி நடைபெறும் நூற்றாண்டு பிறந்தநாள் விழா ஒரு முன்னோடி விழாவாக திகழ வேண்டும் என்று அவர் பேசினார்.

அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது
        எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா அரசின் சார்பில் வருகின்ற 30ம் தேதி ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக இருக்கும் இது போன்று யாருக்கும் நடைபெறாத வகையில் இந்த விழா சிறப்பாக அமைய வேண்டும் மேலும் அரசின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், கட்டுரைப்போட்டிகள், சிறப்பாக நடைபெறுகிறது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அன்றை தினம்பரிசுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார் என்றார்.

அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசியதாவது
        அம்மாவின் எண்ணப்படி  எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது அதன் தொடக்கமாக மதுரையில் வருகின்ற 30ம் தேதி சிறப்பாக நடைபெறுகிறது அன்றைய தினம்  அதிமுக தொண்டர்கள் தங்கள் குடும்ப சகிதமாக பங்கேற்று நம் தெய்வம்  எம்ஜிஆருக்கு  குடும்ப விழாவாக நாம் கொண்டாட வேண்டும் மதுரையில் நடைபெற்ற விழாவைப்போல் வேறு எங்கேயும் நடைபெறவில்லை என்ற வரலாற்றை நாம் பெற்றிட வேண்டும் என்று அவர் பேசினார்.


அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது
 எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் கடல் அலைபோல் திரண்டு இருப்பதை பார்த்து இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்பது போல் உள்ளது அம்மாவின் மருத்துவமனை செலவிற்காக அதிமுக சார்பில் ரூ.6 கோடி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
      எம்ஜிஆர் மக்கள் சக்தி என்றால்  அம்மா மகா சக்தி ஆவார். எம்ஜிஆர்  படத்திலும் சரி, அம்மா படத்திலும் சரி மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை கூறி மக்களை நல்வழிப்படுத்தினார்கள் அதே போல் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் திண்டுக்கல் இருந்தது அப்போது திண்டுக்கல் இடைத்தேர்தலில்எம்ஜிஆர்  மாயத்தேவரை களமிறக்கி மாபெரும் சரித்திரம் படைத்தார்.
      எம்ஜிஆரும்,  அம்மாவும் மதுரை மக்களை என்றும் மறந்தது இல்லை அவர்கள் இருவரது அரசியல் வாழ்விலும் மதுரை இணைந்து தான் இருந்தது இந்த மதுரை மண்ணில் தான் எம்ஜிஆர், அம்மாவிற்கு செங்கோல் வழங்கினார். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்தது தான் மதுரையாகும், மேலும் வெற்றி விழாவும் மதுரையில் தான் நடத்தப்பட்டது அதிமுகவிற்கும் மதுரைக்கும் பல்வேறு பெருமைகள் உண்டு ஏனென்றால் பல்வேறு காலகட்டங்களில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அதிமுகவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்துள்ளது.
        இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மதுரையில் தான் எம்ஜிஆரின்  நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை மதுரையில் நடத்த  அம்மா  விரும்பினார்கள்.  தற்போது அம்மாவின் எண்ணப்படி எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை 32 வருவாய் மாவட்டங்கள் தோறும் நடைபெற உள்ளது அதன் முதல் தொடக்கவிழா அம்மாவின் கனவை நனவாக்கும் வண்ணம் மதுரையில் வருகின்ற 30ம் தேதி சிறப்பாக நடைபெறுகிறது இந்த விழாவை இந்தியாவே எதிர்நோக்கிகொண்டிருக்கிறது இந்த விழாவை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நாம் சிறப்பாக கொண்டாட வேண்டும்
        விதையை விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை எனவே அதிமுகவை யாரும் அசைக்க முடியாது அதிமுகவிற்கு எப்போதும் வெற்றிடம் இல்லை 100 ஆண்டுகள் ஆனாலும் நமக்கு தோல்வி என்பதே கிடையாது ஏனென்றால் அம்மாவின் ஆன்மா எப்போதும் நமக்கு உதவிசெய்துகொண்டே இருக்கும் என்று அவர் பேசினார்.

அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது
       எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கூட்டம் ஒரு மாநாடு போல் உள்ளது இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் உள்ளனர் ஆனால் எம்ஜிஆருக்கும், அம்மாவிற்கும் உள்ள மக்கள் செல்வாக்கு யாருக்கும் கிடையாது 1967ல் காங்கிரஸ் கட்சி தமிழகத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது அதே போல் 2011ல் தி.மு.க.தமிழகத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி காங்கிரசும், தி.மு.க.வும் தமிழகத்தை ஆள முடியாது.  அம்மா லட்சியம் கொண்ட இந்த இயக்கம் தான் இன்னும் 100 ஆண்டுகள் ஆளும்
         பொதுவாக தலைவர்கள் மறைந்தால் அந்த இயக்கமும் மறையும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் 45 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த இயக்கத்தை உருவாக்கிய எம்ஜிஆர் மறைவிற்குப்பின்னும் இந்த இயக்கம் மக்கள் பணியை ஆற்றி வருகிறது அதே போல் அம்மாவின் மறைவிற்குப்பின் இந்த இயக்கம் மக்கள் பணி ஆற்றி வருகிறது ஏனென்றால் இந்த இயக்கத்திற்காக விதைத்த விதை தான் இன்று ஆலமரமாக வளர்ந்து மக்கள் பணி ஆற்றி வருகிறது அதற்கு காரணம் எம்ஜிஆரும்,  அம்மாவும் ஆகும்.
          அதிமுகவை பற்றி பல்வேறு பத்திரிக்கைகள் விமர்சனம் செய்து செய்திகளை போட்டுவந்தனர் தற்போது அதிமுகவை பாராட்டி செய்திகள் போட்டு வருகின்றனர் ஏனென்றால் அதிமுக சார்பில் பிரமாணபத்திரங்கள் அதிக அளவில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அந்த பிரமாண பத்திரத்தை வைக்க இடமில்லாத வகையில் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் நிச்சயம் நமக்கு வரும் அது வெகு தொலைவில் இல்லை அது எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் பரிசாக அதிமுகவிற்கு கிடைக்க அம்மாவின் ஆத்மா நமக்கு நிச்சயம் உதவி செய்யும் .
         
          குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல் ஸ்டாலின் சட்டசபையில் விதிகளுக்கு புறம்பாக பல்வேறு கூச்சல் குழப்பங்களை செய்து வருகிறார். அதை மக்கள் நன்கு கவனித்துதான் வருகின்றனர் அதே போல் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலிலும் லஞ்சம் கொடுத்தோம் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். தி.மு.க.வேட்பாளர் என்ன செய்தாரோ அதையேதான் நாங்களும் செய்தோம் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்தோம், ஓட்டுகேட்டோம் வேறு எந்த குறுக்கு வழியில் நாங்கள் செல்லவில்லை அதில் வெற்றி கிடைக்கும் என்று தெரிந்து ஸ்டாலின் பல்வேறு அவதூறு செய்திகளை பரப்பினார்.
    
         எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா மதுரையில் 30ம் தேதி சிறப்பாக நடைபெறுகிறது இதில் 5லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்கின்றனர் இந்த விழாவானது மதுரையில் மீண்டும் ஒரு சித்திரை திருவிழா போல் இருக்க வேண்டும் இதுவரை எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத வகையில் நமது தெய்வமாக இருக்கும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவானது ஒரு மாபெரும் சாதனை படைக்கும் விழாவாக இருக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து