முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலா வாகனத்தினை கலெக்டர் வெங்கடாசலம் துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      தேனி
Image Unavailable

தேனி.- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மதுரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஆரம்பகால பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலா வாகனத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  கொடியசைத்து துவக்கி வைத்தார்.
  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் மதுரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஆரம்பகால பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலா செல்லுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  நமது மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆரம்பகால பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று வரும் மனவளர்ச்சி குன்றிய, காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள், பாதுகாவலர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் ஆகியோர்களுடன் 40 நபர்களுக்கு வைகை அணை, மதுரை காந்தி மியூசியம், நாயக்கர் மஹால் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு, இவர்களுக்கான போக்குவரத்து கட்டணம், நுழைவுக்கட்டணம், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு ஆகிய செலவினங்களை மதுரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  தெரிவித்தார்.
     இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள்  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ஞானசேகரன்  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  ஜெயசீலி   உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து