முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்போன் வழியாக மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் - சட்டசபையில் அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : செல்போன் வழியாக மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள ஆயிரத்து 1700 பணியிடங்கள் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும் என்றும் சட்டபேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

30 சதவீத மானியம்

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி எரிசக்தித்துறை மானியக்கோரிக்கையின் போது வெளியிட்ட புதிய அறிவிப்புகளில், விவசாய பயன்பாட்டிற்கான சூரியமின் சக்தி நீர் பம்பு மாதிரி திட்டம் மாநிலம் முழுவதும் 5, 7.5 மற்றும் 10 குதிரைத்திறன் கொண்ட மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாத 1000 எண்ணிக்கை சூரிய மின்சக்தி நீர் பம்புகள், தமிழக அரசின் 40 சதவீத மானியம், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையின் 20 சதவீத மானியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 30 சதவீத மானியம் மற்றும் விவசாயிகளின் பங்காக 10 சதவீதம் என்ற அடிப்படையில் இலவச விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்து, பதிவு மூப்பு பட்டியலில் இருந்து தங்களது விண்ணப்பதை நீக்கிக் கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் வேளாண்மை துறையுடன் ஒருங்கிணைந்து வழங்கப்படும்.

இலவச மின் இணைப்பு

விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலிலுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பைப் பெறும் வகையில் விரைவு மின்னிணைப்பு வழங்கல் திட்டத்தின் மூலம் 5 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம், 7.5 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரமும், 10 குதிரைத்திறன் உள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.3 லட்சம் வீதம் ஒரு முறை கட்டணம் செலுத்தும் 10 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு 6 மாத காலத்திற்குள் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.

பணி நியமனம்

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையினால் மாநிலத்திலேயே முதல்வகையான 500 மெகாவாட் திறன் கொண்ட சூரியபூங்கா ஒன்று தனியார் நிறுவனம் மூலம் நிறுவ உதவி செய்யப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 2017 -18 ம் ஆண்டில் 300 உதவி பொறியாளர் மின்னியல், 25 உதவிப்பொறியாளர் சிவில், 300 தொழில் நுட்ப உதவியாளர் மின்னியல், 400 கள உதவியாளர், 250 இளநிலை உதவியாளர் (கணக்கு) மற்றும் 300 கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை பதவிகளுக்கான தகுதியான நபர்கள் வெளிப்படையான முறையில் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு, எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

மின்பகிர்மான கோட்டங்கள்

திருவள்ளுர் மற்றும் பல்லடத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மின்பகிர்மான வட்டங்கள் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். திருமழிசை, திட்டக்குடி மற்றும் ஆலங்குடியை தலைமையிடமாக கொண்டு ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் புதிய மின்பகிர்மான கோட்டங்கள் உருவாக்கப்படும். அந்தியூர் வட்டம் பர்கூரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் பகிர்மான பிரிவு அலுவலகம் உருவாக்கப்படும். கிண்டியில் ரூ.10 மதிப்பீட்டில் அலுவலர் குடியிருப்பு அமைக்கப்படும். கொரட்டூரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்படும்.

செல்போன் வழியாக ...

செல்போன் வழியாக மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தற்பொழுது இயக்கத்தில் உள்ள 1912 தொலைபேசி வாயிலாக மின்தடை பழுது நீக்கும் சேவை ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டணம் இல்லா தொலைபேசி வசதியாக மாற்றப்படும். தமிழகத்தில் குறு,சிறு தொழில்முனைவோர் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு 112 கிலோவோட் மின் தேவை வரையிலான புதிய மின்மாற்றி நிறுவ தேவைப்படாத புதிய தொழிற்சாலை மின் இணைப்புகளுக்கு 15 தினங்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்.

ரூ.52 கோடி மதிப்பீட்டில் ....

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகில் வெளிப்பரப்பு உறைவி புதுப்பித்தல், அலகு 5 ல் தற்பொழுது உள்ள காலாவதியான கட்டுப்பாட்டு அமைப்புக்கு பதிலாக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவுதல், அலகு 4 தற்பொழுது உள்ள மறு சூடாக்கி அமைப்பை முழுவதுமாக நீக்கி புது மறு சூடாக்கி அமைத்தல் மற்றும் நிலக்கரி கையாளும் பணியை மேம்படுத்த 2 ஆயிரம் மெட்ரிக்டன கொள்ளவுடைய ஒரு இணைப்பு நிலக்கிரி கொணரும் அமைப்பு நிறுவுதல் ஆகிய பணிகள் ரூ.52 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

அம்மா பசுமை கிராமம்

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை வருடாந்திர அடிப்படையில் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து மின்சக்தியை பூர்த்தி செய்யும் விதமாக கிராமத்திலேயே கிடைக்கும் நிலையான பசுமை எரிசக்தி ஆதாரங்களை கொண்டு அம்மா பசுமை கிராமம் ஒன்று நிறுவப்படும். தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையினால் அதன் உள் மற்றும் வெளி பங்குதாரர்களை இலக்காக கொண்ட நிலையான ஆற்றல் அமைப்புகளின் சமூக பொருளாதார, நிதி ,நிர்வாக , தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு பகுதிகளுடன் தொடப்புடைய பாடங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைக்கப்பட்ட பயிற்சி திட்டமான நிலையான எரிசக்தி பயிற்சி முன் முயற்சியை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து