முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கிற்கு எதிரான போட்டியில் பந்து வீச்சை தேர்வு செய்த முடிவில் தவறு எதுவுமில்லை: விராட் கோலி

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியின் டிராபி இறுதிப்போட்டில் பந்து வீச்சை தேர்வு செய்த முடிவில் எந்த தவறு இல்லை என்றும், இறுதிப்போட்டியில் கிடைத்த வெற்றி பாகிஸ்தான் அணி வீரர்களின் திறமைக்கு கிடைத்த வெற்றி என்றும் கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

திறமைக்கு ....

பாகிஸ்தான் அணி வீரர்களின் திறமைக்கு கிடைத்த வெற்றி இது என்று இந்திய அணியின் அணித்தலைவர் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில், 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றியது. நேற்று முன்தினம் போட்டி குறித்து இந்திய அணியின் அணித்தலைவர் விராட் கோலியிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
எளிதாக எடுக்கக்கூடாது

பாகிஸ்தான் வீரர்களுக்கும், அந்நாட்டு ரசிகர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்திய ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டதாகவும் கோலி கூறினார். இந்த வெற்றி பாகிஸ்தான் வீரர்களின் திறமைக்கு கிடைத்த வெற்றி என்றும், யாரையும் எளிதாக எடுத்து கொள்ள கூடாது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் பந்துவீச்சு குறித்து பேசிய கோலி, இன்னும் கூடுதலாக விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கலாம் என்றும், பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்றும் கூறினார்.

தவறு எதுவுமில்லை

இறுதியாக, டாஸ் வெற்றி பெற்று பந்து வீச்சை தேர்வு செய்த முடிவில் தவறு எதுவுமில்லை என்று கூறிய இன்றைய (நேற்று முன்தினம்) தினம் இந்திய அணிக்கான தினம் இல்லை என்றார். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தந்த அழுத்தமே இந்திய தோல்விக்கு முக்கியக் காரணம். என்ன இருந்தாலும் நாங்கள் தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம். இறுதிப் போட்டி வரை முன்னேற உழைத்த அனைவருக்கும் அந்த பெருமை சேரும். இறுதிப் போட்டியில் எல்லா விதத்திலும் எங்களை விட அவர்கள் சிறப்பாக ஆடினார்கள். கடைசியில் நாம் கண்டிப்பாக எதிரணியின் திறமையை ஏற்றுக்கொண்டு மதிக்கவேண்டும்".  என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.  இந்திய அணி அடுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து