முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு மற்ற நாடுகள் வந்து விளையாட கேப்டன் சர்பராஸ் அகமது வேண்டுகோள்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

இஸ்லாமாபாத் : இனியாவது மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என கேப்டன் சர்பராஸ் அகமது உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாக். வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவின் கனவை தகர்த்து தூள் தூளாக்கியது பாகிஸ்தான் அணி. இரு அணிகள் இறுதிப்போட்டியில் மோதுவதால், உலகம் முழுவதும் யார் வெல்வார்கள் என எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இந்திய அணியை பாகிஸ்தான் அணி வென்றது. இது அவர்களது முதல் வெற்றியாகும்.

நாங்கள் சாம்பியன்

இந்த வெற்றி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ஃபராஸ், 'இது ஒருநாள்.. இருநாள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய வெற்றி அல்ல. பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட நெடிய நாள்களுக்கு இந்த வெற்றி நினைவில் நிற்கவேண்டிய ஒன்று. நீண்ட நாள்களாக துபாயைச் சொந்த கிரவுண்டாகக் கொண்டு விளையாடி வருகிறோம். இப்போது நாங்கள் சாம்பியன். இந்த வெற்றி பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும்.

வேண்டுகோள்

இனியாவது மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வந்து எங்களுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமதுவின் தாயார் அகீலா பானு இந்தியர். உத்தரப் பிரதேச மாநிலம் எட்வா பகுதியைச் சேர்ந்தவர். கராச்சி நகரைச் சேர்ந்த ஷகீல் அகமதுவுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டப் பின்னரே, அகீலா பானு பாகிஸ்தான் சென்றார். சர்பராஸ் அகமதுவின் தாய் மாமா மெக்மூத் ஹசன், எடாவா விவசாய கல்லூரியில் க்ளெர்க்காகப் பணி புரிகிறார். மாமாவும் மருமகனும் இதுவரை மூன்று முறை மட்டுமே நேரில் சந்தித்துள்ளனர்.

இந்தியா வந்தார்

கடந்த 1991ம் ஆண்டு ஹஸனின் திருமணம் எட்வாவில் நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்க தாயாருடன்  சர்பராஸ் முதன்முறையாக இந்தியா வந்தார். அப்போது, சர்பராசுக்கு நான்கு வயதுதான் ஆகியிருந்தது. கடந்த டி20 உலகக் கோப்பையின் போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி சண்டிகரில் விளையாடியது. அந்த சமயத்தில் இரண்டாவது முறையாக இருவரும் சந்தித்துள்ளனர். பின்னர் 2015ம் ஆண்டு கராச்சியில் நடந்த  சர்பராஸ் அகமதுவின் திருமணத்தில் ஹசன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும் போது உங்கள் மனம் எந்நிலையில் இருக்கும் என்ற கேள்வி ஹசன் பதிலளிக்கையில், '' ''சர்பராஸ் அகமது அவன் நாட்டுக்காக விளையாடுகிறான்... நான் என் நாடு ஜெயிக்க வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன்'' என்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து