முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயக் கடன் தள்ளுபடி என்ற பேச்சுக்கே இடமில்லை : மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்ட அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 20 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலமும் விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு விவசாயக் கடனை தள்ளுபடி செய்யுமா என்ற கேள்விகள் எழுந்துவருகின்றன.

இதுகுறித்து டெல்லியில்  நேற்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அருண் ஜெட்லி, "விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி ஒரு யோசனை மத்திய அரசிடம் இல்லவே இல்லை. மாநில அரசுகளின் விவசாயக் கடன் ரத்து அறிவிப்பு தொடர்பாக நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. நிதிப் பற்றாக்குறையை சீரமைப்பது உள்ளிட்டவற்றிலேயே மத்திய அரசு கவனம் இருக்கிறது.

ஏற்கெனவே மத்திய அரசின் நிலைப்பாட்டை நான் தெரிவித்துவிட்டேன். விவசாயக் கடன்களை ரத்து செய்யும் மாநில அரசுகள் அதற்கான நிதி ஆதாரங்களை அவர்களேதான் திரட்டிக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. இதற்குமேலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து