முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

செவ்வாய்க்கிழமை, 20 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

டாமாஸ்கஸ் : சிரியா விமானப் படையின் போர் விமானத்தை அமெரிக்க விமானப் படை சுட்டு வீழ்த்தியது.

சிரியாவின் ராக்கா நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமையகமாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சிரியா ஜனநாயக படை தரைமார்க்கமாக ராக்காவை சுற்றிவளைத்து போரிட்டு வருகிறது.

சிரியா அதிபர் ஆசாத், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருகிறார். அதேநேரம் அமெரிக்காவும் அதன் ஆதரவு படைகளும் சிரியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் சிரியா ஜனநாயக படை வீரர்கள் மீது சிரியா விமானப் படையின் போர் விமானம் குண்டுகளை வீசியது. அந்த விமானத்தை அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. விமானி பாராசூட்டில் குதித்து தப்பிவிட்டார்.

இதுதொடர்பாக அமெரிக்க கூட்டுப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிரியா ராணுவத்துடனோ, சிரியா வுக்கு ஆதரவு அளிக்கும் ரஷ்ய ராணுவத்துடனோ நாங்கள் போரிட வில்லை. எனினும் எங்களது ஆதரவு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களின் பாதுகாப்புக்காகவே சிரியா போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தினோம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து