முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: தண்டனைக்கான விவாதம் தள்ளிவைப்பு

செவ்வாய்க்கிழமை, 20 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : 1993-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு தொடர்பான 2-வது வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை தொடர்பான விவாதம்  ஒருநாள் தள்ளிவைக்கப் பட்டது.

இந்த வழக்கில் தாதாக்கள் முஸ்தபா தோஸா, அபு சலீம் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என மும்பை தடா நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அறி வித்தது. இவர்களுக்கான தண்டனை குறித்த விவாதம் நேற்று தொடங்கும் என கூறப் பட்டது.

இந்நிலையில் நேற்று நீதி மன்றம் கூடியவுடன், குற்றவாளி பெரோஸ் கான் தரப்பில் அவரது வழக்கறிஞர் அப்துல் வகாப் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

“எனது கட்சிக்காரரை பாதுகாப் பதற்காக மூன்று சாட்சிகளை விசாரிக்க அனுமதிக்க வேண்டும், தண்டனை தொடர்பான விவா தங்களுக்கு தயாராவதற்கு 2 வாரம் அவசாகம் அளிக்க வேண்டும்” என்று அவர் கோரியிருந்தார்.

எனினும் சாட்சிகளை விசாரிக்க அனுமதி வழங்கிய நீதிபதி 2 வார அவகாசம் அளிக்க மறுத்துவிட்டார். தண்டனை தொடர்பான விவாதம் 1 நாள் மட்டுமே தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், “இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கேட்டு வாதிடுவேன்” என்று சிபிஐ வழக்கறிஞர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து