முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க திட்டம்

செவ்வாய்க்கிழமை, 20 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பாகிஸ்தானை தளமாக கொண்ட தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து . பாகிஸ்தான் மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளது.

பாகிஸ்தானை தளமாக கொண்ட தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான அணுகுமுறையை கடுமையாக்குவதற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம் தயாராகி வருகிறது.

ட்ரோன் தக்குதல்

இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:-

அமெரிக்கா ட்ரோன் தக்குதல்கலை அதிகபடுத்துவது, பாகிஸ்தானுக்கு உதவுவதை நிறுத்திவைத்தல், இறுதியில் பாகிஸ்தானை பிரதான அல்லாத நேட்டோ  அல்லாத கூட்டாளியாக குறைப்பது குறித்து  ஆலோசித்து  வருவதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சில அமெரிக்க அதிகாரிகள், வெற்றிக்கான வாய்ப்புக்கள் குறித்து சந்தேகம் கொண்டுள்ளனர். பாகிஸ்தானின் போர்க்குணமிக்க குழுக்களுக்கான ஆதரவைத் தடுக்க முந்தைய அமெரிக்க முயற்சிகள் தோல்வியடைந்தன என வாதிடபட்டது.

உடனடி பதில் இல்லை

ஏற்கனவே பாகிஸ்தான் பரம விரோதியான இந்தியாவுடன் அமெரிக்க உறவுகளை வலுப்படுத்திவருகிறது. ஆப்கானிஸ்தானில் 16 ஆண்டுகால யுத்தத்தை வழிநடத்துகின்ற மூலோபாயத்தை நிறைவேற்ற பாகிஸ்தானுடனான அதிக ஒத்துழைப்பை சில அமெரிக்க அதிகாரிகள்  நாடுகின்றனர். துல்லியமான நடவடிக்கைகளை முடிவு செய்யப்பட வேண்டி உள்ளது என கூறி உள்ளனர். வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் ஆய்வு முடிவடைவதற்கு முன்பே இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. வாஷிங்டனில்  உள்ள பாக்கிஸ்தான் தூதரகம் கருத்து கேட்டதற்கு உடனடியாக பதில் சொல்லவில்லை.

"அமெரிக்காவும் பாகிஸ்தானும் தேசிய பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தொடர்கின்றன" என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஆடம் ஸ்டம்ப் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து