முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை: நீதிமன்றங்கள் தீர்ப்புக்கு பின்பே தமிழக அரசு முடிவு எடுக்கும் - முதல்வர் எடப்பாடி பதில்

செவ்வாய்க்கிழமை, 20 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் மற்றும் பெரும்பான்மை மக்களின் கோரிக்கைக்கேற்ப தமிழக அரசு  முடிவு எடுக்கும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பசுவதை தடுப்பு

தமி¬ழக சட்¬டப் பேர¬வை¬யில் நேற்று கேள்வி நேரத்திற்கு பின்¬னர் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து எதிர்க்¬கட்சி தலை¬வர் மு.க.ஸ்டாலின் பிரச்சினை ஒன்றை கொண்டு வந்தார். இது குறித்து விளக்கம் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழ்நாட்டில் பசுவதை தடுப்பு கடந்த 40 ஆண்டுகளாக அமலில்உள்ளது என்பதை இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது சந்தைகளில் கால்நடைகள் சந்தைப்படுத்துதலை முறைப்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றம் துறையின் மூலம், கடந்த 23.5.2017 அன்று, 1960-ம் ஆண்டைய பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின்கீழ்,கால்நடைகள் சந்தைப்படுத்துதல் விதிகள், 2017 வெளியிடப்பட்டது. இந்த விதிகள் மாட்டினங்களான பசு, எருது, எருமை, கன்றுகள் மற்றும் ஒட்டகம் ஆகியவற்றிற்கு பொருந்தும்.

விற்பனை செய்யக்கூடாது

இவ்விதிகளின் 22(b)(ii), 22(d)(ii) மற்றும் 22(e) பிரிவுகளின் படி,சந்தைகளில் விற்கப்படும் மாடுகள் இறைச்சிக்காகவெட்டப்படக்கூடாதுஎனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விதிகளின் பிரிவு22(d)(iv) ன்படி, மாடுகளை வாங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விதிகளின் 8-வது பிரிவின் படி மாநில எல்லைகளுக்கு 25 கிலோ மீட்டர் தொலைவிற்குள் மாட்டுச் சந்தைகள் செயல்படக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்காலத் தடை

மேலும் இவ்விதிகளின் பிரிவு 22(e)(iii)ன்படி, மாட்டினைக்கொள்முதல் செய்தவர், அதனை மதம் சார்ந்த நிகழ்வுகளுக்காக பலியிடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கூறிய விதிகளை செயல்படுத்தத் தடை ஆணை கோரி,சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் கடந்த 23-ம் தேதி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, உயர்நீதிமன்ற அமர்வு, இவ்விதிகளை செயல்படுத்துவதற்கு நான்கு வாரத்திற்கு இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. இந்த விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த அப்துல் பகீம் குரேஷி வழக்குபதிவு செய்துள்ளார். இவ்வழக்கு வரும் ஜூலை 11- ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

தீர்ப்புக்குப்பின் ...

மேலும், மத்திய அரசுக்கு இந்த விதிகளால் விவசாயிகள் பலவிதங்களில் பாதிக்கப்படுவார்கள் என்பதையும், விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்ததை கருத்தில் கொண்டு, விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளதாக பல பத்திரிக்கைகளில் செய்தி வெளிவந்துள்ளது. உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும், இது குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளது. தீர்ப்பிற்குப்பின் உரிய நிலைப்பாட்டினை தமிழக அரசு எடுக்கும் எனவும் பெரும்பான்மையான மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசு செயல்படும்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து