முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை இந்திய வரலாற்றில் சிறப்புமிக்கதாகும் - அரசியல் கட்சிகளுக்கு பிரதமர் மோடி நன்றி

செவ்வாய்க்கிழமை, 20 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ : ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமுலாக இருப்பது இந்திய வரலாற்றில் சிறப்புமிக்க நாளாகும். இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

எம்.பி.க்கள் கூட்டம்

வாட்வரி, சுங்கவரி, கலால் வரி ஆகிய  வரிகளை ஒழித்துவிட்டு நாடு முழுவதும் ஒருமாதிரியான வரிவிதிப்பு இருக்கும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) முறையை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மத்திய அரசு அமுல்படுத்த உள்ளது. இதனையொட்டி வரும் 30-ம் தேதி நள்ளிரவில் அனைத்துக்கட்சி எம்.பி.க்களின் கூட்டம் பாராளுமன்ற மையமண்டபத்தில் நடைபெறுகிறது. கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நள்ளிரவில் நாடு சுதந்திரம் பெற்றபோது இதேமாதிரியான கூட்டம் பாராளுமன்ற மையமண்டபத்தில் நடைபெற்றது. அதேமாதிரி இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

சிறப்புமிக்க நாள்

இந்தநிலையில் லக்னோ நகரில் டாக்டர் அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் வரும் ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி வரிவதிப்பு முறை அமுல்படுத்தப்பட உள்ளது. அந்த நாள் இந்திய வரலாற்றில் சிறப்புமிக்க நாளாக இருக்கும். பலதரப்பட்ட கொள்கைகளையுடைய அரசியல் கட்சிகள் இருக்கும் இந்தியாவில் எப்படி ஒருமித்த கருத்துடன் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமுல்படுத்தப்படுகிறது என்று உலகமே வியக்கப்போகிறது என்றார். உலகிற்கே இது முன்னுதாரணமாக இருக்கும். ஜிஎஸ்டி என்னும் வரிசீர்திருத்த முறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்றிய அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்  நாட்டில் உள்ள அனைத்து மாநில சட்டசபைகளுக்கும், பாராளுமன்ற லோக்சபை மற்றும் மாநிலங்களவைக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பலதரப்பட்ட கொள்கைகளை உடைய  அரசியல் கட்சிகள் உள்ள இந்தியாவில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதை உலகம் பார்க்கப்போகிறது.

உற்பத்தி அதிகரிக்கும்

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதியில் அமுல்படுத்தப்பட இருந்தது. பின்னர் 3 மாதங்கள் தள்ளிப்போடப்பட்டது. ஜூன் 30-ம் தேதி நள்ளிரவில் பாராளுமன்ற மையமண்டபத்தில் நடக்கவிருக்கும் பிரமாண்ட விழாவில் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை தொடங்கப்படுகிறது. இந்த புதிய வரிவிதிப்பு முறையால் இந்தியாவுக்கு படிப்படியாக புதிய வடிவத்தை கொடுப்பதோடு   வர்த்தக முறையிலும் சீர்திருத்தம் ஏற்படும். நாட்டில் உள்ள 30 மாநிலங்களுக்கிடையே உள்ள தடையையும் போக்கும். இந்தியாவின் 3 டிரிலியன் பொருளாதாரத்தையும் 130 கோடி மக்களையும் ஜிஎஸ்டி யானது ஒன்றிணைக்கும். மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் வருவாய் அதிகரிக்கும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அதோடு ஒட்டுமொத்த உற்பத்தியும் அதிகரிக்கும். வரிஏய்ப்பை தடுப்பதோடு நாட்டில் வரி செலுத்துவோர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறினார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து